பெருந்துறையில் 2 நாட்கள் இடைவிடாமல் மதுகுடித்த வடமாநில தொழிலாளி சாவு
பெருந்துறையில் 2 நாட்கள் இடைவிடாமல் மதுகுடித்த வடமாநில தொழிலாளி இறந்தார்.
பெருந்துறை
பெருந்துறையில் 2 நாட்கள் இடைவிடாமல் மதுகுடித்த வடமாநில தொழிலாளி இறந்தார்.
வடமாநில தொழிலாளி
பீகார் மாநிலம் சமஸ்டிபூர் மாவட்டம் வரிஷ்நகரைச் சேர்ந்தவர் பைஜூகுமார் ராம் (வயது 33). இவருடைய மனைவி சுலேகா குமாரி (30). இவர்களுக்கு 3 பெண் குழந்தை மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளனர்.
பைஜூகுமார், கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு வேலை தேடி பீகாரிலிருந்து ஈரோடு மாவட்டம் பெருந்துறைக்கு வந்தார். சிப்காட்டில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்துக்கொண்டு, அங்கு வேலை பார்க்கும் தொழிலாளர்களுடன் விடுதியில் தங்கியிருந்தார்.
சாவு
இந்தநிலையில் தீபாவளியையொட்டி தொழிற்சாலைக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. இதனால் பைஜூகுமார் 23-ந் தேதி முதல் நேற்று முன்தினம் மாலை வரை தொடர்ந்து இடைவிடாமல் மதுகுடித்தபடியே இருந்ததாக தெரிகிறது. இதனால் சுயநினைவு இல்லாமல் சிப்காட் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் விழுந்து கிடந்தார். இதுபற்றி தெரிய வந்ததும் அவருடைய நண்பர்கள் அங்கு சென்று அவரை மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவ மனையில் சேர்த்தார்கள். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் பைஜூகுமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.