நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்பு

தர்மபுரி கலெக்டர் மற்றும் காவல்துறை அலுவலகங்களில் நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது.

Update: 2023-08-18 18:45 GMT

கலெக்டர் அலுவலகம்

ஆண்டுதோறும் ஆகஸ்டு மாதம் 20-ந்தேதி நல்லிணக்க தினம் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில், இந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 20-ந்தேதி(ஞாயிற்றுக்கிழமை ) அரசு விடுமுறை என்பதால் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் சாந்தி நல்லிணக்க நாள் உறுதிமொழி வாசிக்க அரசுத்துறை அலுவலர்கள், மாவட்ட கலெக்டர் அலுவலக அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் பின்தொடர்ந்து வாசித்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் நேர்முக உதவியாளர்கள் நஷீர் இக்பால், மரியம் ரெஜினா மணிமேகலை, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் லோகநாதன், கலெக்டர் அலுவலக மேலாளர் ராஜசேகர் உட்பட அரசுத்துறை அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

காவல் துறை அலுவலகம்

இதேபோன்று தர்மபுரி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம் நல்லிணக்க நாள் உறுதிமொழி வாசிக்க காவல்துறை அலுவலர்கள் மற்றும் போலீசார் அனைவரும் பின்தொடர்ந்து வாசித்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன், தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பழகன், போலீஸ் சூப்பிரண்டு நேர்முக உதவியாளர் ரேணுகா தேவி மற்றும் காவல் துறை அலுவலக பணியாளர்கள், போலீசார் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்