தர்மபுரியில் திருவள்ளுவர் தின விழா கொண்டாட்டம்

Update: 2023-01-16 18:45 GMT

தர்மபுரி:

தர்மபுரி குறள் நெறி பேரவை சார்பில் திருவள்ளுவர் தின விழா தர்மபுரி ராஜகோபால் கவுண்டர் பூங்கா அருகில் கொண்டாடப்பட்டது. விழாவுக்கு குரல் நெறி பேரவையின் தலைவர் குமரவேல் தலைமை தாங்கினார். செயலாளர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் பரமசிவம் வரவேற்றார். விழாவையொட்டி திருவள்ளுவர் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் திருவள்ளுவரின் குரல் ஓவியம் குறித்து பலர் பேசினர். இந்த நிகழ்ச்சியில் அன்னை கஸ்தூரிபா சேவா சங்க தலைவர் சக்திவேல், ஆசிரியர் சவுந்தர பாண்டியன், நிர்வாகிகள் அர்த்தனாரி, நாகேந்திரன், அறிவொளி, ராஜேந்திரன், சத்தியவேல், தமிழ்தாசன், பிறைசூடன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்