முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மருமகள் உயிரிழப்பு
முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகனின் மருமகள் உயிரிழந்தார்.;
சென்னை,
அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகனின் மருமகள் பூர்ணிமா (30) உயிரிழந்தார். தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் உள்ள தனது வீட்டில் கடந்த 18-ம் தேதி விளக்கு ஏற்றியபோது அவரது ஆடையில் தீப்பிடித்தது. இதில் பூர்ணிமா படுகாயம் அடைந்தார்.
அதையடுத்து அவர் தர்மபுரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு பூர்ணிமாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை பூர்ணிமார் பரிதாபமாக உயிரிழந்தார். மருமகள் உயிரிழந்தது அதிமுக முன்னாள் அமைச்சரின் குடும்பத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.