தொழிலதிபர் டத்தோ பிரகதீஸ்குமார்பிறந்தநாளை முன்னிட்டு கோவிலில் வழிபாடு
தொழிலதிபர் டத்தோ பிரகதீஸ்குமார் பிறந்தநாளை முன்னிட்டு கோவிலில் வழிபாடு நடைபெற்றது.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள பூலாம்பாடியை சேர்ந்தவர் தொழிலதிபர் டத்தோ எஸ்.பிரகதீஸ்குமார். இவர் இந்தியா மட்டுமல்லாமல் மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் தொழில் செய்து வருகிறார். இவரது பிறந்த நாளை முன்னிட்டு பூலாம்பாடி திரவுபதி அம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பெரம்பலூரில் உள்ள ஆதரவற்றோர் இல்லங்கள், வேலா கருணை இல்லம், செஞ்சேரி வித்யாஸ்ரமம் ஆகியவற்றில் உள்ள முதியவர்கள், குழந்தைகள் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தொழிலதிபரின் நேர்முக உதவியாளர் மணி, கவுன்சிலர் மாணிக்கம், பத்திரம் சிவா, மண்மணி, ராமதாஸ், சதீஷ்குமார் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.