கூடலழகர் கோவிலில் தசாவதார காட்சி
கூடலழகர் கோவிலில் தசாவதார காட்சி நடைபெற்றது.
மதுரை கூடலழகர் பெருமாள் கோவிலில் நடைபெற்று வரும் வைகாசி திருவிழாவில் நேற்று முன்தினம் குதிரை வாகனத்தில் பெருமாள் மதிச்சியம் ராமராயர் மண்டகப்படியில் எழுந்தருளினார். இதைதொடர்ந்து இரவு தொடங்கி விடிய விடிய தசாவதாரம் நடைபெற்றது. அப்போது மச்ச, கூர்ம, வாமன, ராம, பலராமர் அவதாரங்களிலும், மேலும் முத்தங்கி, சொர்ண அங்கி அலங்காரத்திலும் இதையடுத்து கருட வாகனத்திலும் வியூக சுந்தரராஜ பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.