சென்னை வடபழனி முருகன் கோவிலில் கவர்னர் ஆர்.என்.ரவி சாமி தரிசனம்
சென்னை வடபழனி முருகன் கோவிலில் கவர்னர் ஆர்.என்.ரவி குடும்பத்தோடு சாமி தரிசனம் செய்தார்.
சென்னை,
சென்னை வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரி விழாவையொட்டி கொழுபொம்மைகள் வைக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் பொதுமக்கள் பார்வைக்காக கொலு பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளது. இதனால் கோவிலுக்கு பக்தர்கள் அதிகளவில் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கவர்னர் ஆர்.என்.ரவி குடும்பத்துடன் வடபழனி முருகன் கோவிலுக்கு வருகை தந்து சாமி தரிசனம் செய்தார். சுமார் 20 நிமிடத்திற்கு மேல் வடபழனி முருகனை சிறப்பு தரிசனம் செய்தார். கோவிலுக்கு வந்த கவர்னருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
மேலும், நவராத்திரி விழாவின் கொலு பொம்மைகளை, கவர்னர் குடும்பத்துடன் பார்த்து ரசித்தார். கவர்னர் ஆர்.என் ரவி மற்றும் அவரது மனைவி தமிழக பாரம்பரிய உடையான பட்டு வேஷ்டி, பட்டு சேலையை அணிந்து வந்திருந்தனர்.
கவர்னர் வருகையால் மாலை 3 மணியிலிருந்து கோவிலின் முதன்மை கோபுர நுழைவாயில் வழியாக பகதர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு கிழக்கு கோபுரம் வழியாக அனுமதிக்கப்பட்டனர்.