மகாளய அமாவாசையையொட்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம்

மகாளய அமாவாசையையொட்டி நாகை புதிய கடற்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து பொதுமக்கள் வழிபாடு நடத்தினர். கோடியக்கரையில் ஏராளமானோர் புனித நீராடினர்.

Update: 2023-10-14 18:45 GMT

மகாளய அமாவாசையையொட்டி நாகை புதிய கடற்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து பொதுமக்கள் வழிபாடு நடத்தினர். கோடியக்கரையில் ஏராளமானோர் புனித நீராடினர்.

முன்னோர்களுக்கு தர்ப்பணம்

புரட்டாசி மாத மகாளய அமாவாசை தினத்தன்று பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து படையலிட்டு வழிபாடு நடத்தி அன்னதானம் செய்வது வழக்கம். மாதந்தோறும் வரும் அமாவாசை தினத்தை விட ஆடி அமாவாசை, தை அமாவாசை, மகாளய அமாவாசை, சோமாவதி அமாவாசை தினங்களில் முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் செய்வது மிகவும் சிறப்பானதாகும். இதனால் முன்னோர்கள் மகிழ்ந்து தங்கள் வாரிசுகளை சுபிட்சமாக வாழ வழி செய்வார்கள் என்பது இந்துக்களின் நம்பிக்கை. அதன்படி நேற்று புரட்டாசி மகாளய அமாவாசையையொட்டி நாகை புதிய கடற்கரையில் ஏராளமான பொதுமக்கள் பல்வேறு பொருட்களை வைத்து பூஜை செய்து தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.

கோடியக்கரை

வேதாரண்யம் சன்னதி கடல் மற்றும் கோடியக்கரை ஆதிசேது எனப்படும் சித்தர் கடலில் ஆண்டு தோறும் தை, ஆடி மாதங்களில் வரும் அமாவாசை, அர்த்தோதயம், மகோதயம், மாசி மகம் ஆகிய நாட்களில் ஏராளமானோர் கடலில் புனித நீராடி தங்களது முன்னோர்களை வழிபடுவர்.

அதன்படி நேற்று மகாளய அமாவாசையைெயாட்டி கோடியக்கரை கடலில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். தொடர்ந்து வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் அர்ச்சனை செய்து வழிபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்