ஆபத்தான மரங்களை வெட்டி அகற்ற வேண்டும்

ஆபத்தான மரங்களை வெட்டி அகற்ற வேண்டும்

Update: 2023-02-19 18:45 GMT

வால்பாறை

வால்பாறையில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான தங்கும் விடுதி உள்ளது. இதன் வளாகத்தில் மிகவும் ஆபத்தான நிலையில் யூகலிப்டஸ் மரங்கள் காணப்படுகின்றன. இவற்றின் கிளைகள் பலத்த காற்று வீசும்போது முறிந்து விழுந்து வருகிறது. இதனால் அருகில் உள்ள வீடுகள் சேதமடைந்து வருகிறது. மேலும் சாலையில் நடந்து செல்பவர்களின் மீதும் மரக்கிளைகள் விழுந்து வருகிறது. இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

தென்மேற்கு பருவமழை காலத்தில் அதிக காற்றுடன் மழை பெய்யும் போது, அந்த மரங்களின் கிளைகள் முறிந்து விழுகின்றன. இதனால் எந்த நேரமும் பீதியுடன் நடமாடும் நிலை காணப்படுகிறது. எனவே யாருக்கும் பயனில்லாமல் வளர்ந்து, ஆபத்தான நிலையில் இருக்கும் அந்த மரங்களை வெட்டி அகற்ற வேண்டும். காலை மற்றும் மாலை நேரத்தில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் நடந்து வரும் வழியில் உள்ளதால், மரங்களை வெட்டி அகற்ற விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்