வால்பாறை அருகே குடியிருப்பு பகுதியில் ஆபத்தான மரங்கள் அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

வால்பாறை அருகே குடியிருப்பு பகுதியில் ஆபத்தான மரங்கள் அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

Update: 2022-09-11 16:47 GMT

வால்பாறை

வால்பாறை நகர் பகுதியையொட்டி திருவள்ளுவர் நகர் உள்ளது. இங்கு ஏராளமானவர்கள் குடியிருந்து வருகின்றனர். இந்த நிலையில் இங்கு குடியிருப்பு பகுதியில் ஆபத்தான நிலையில் யூகாலிப்ட்ஸ் மரங்கள் அதிகளவில் உள்ளது. தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால், காற்று வீசும்போது மரங்கள் முறிந்து வீடுகளின் மீது விழுந்து பெரும் சேதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் குடியிருப்பு பகுதி மக்கள் அச்சத்துடனே வசிக்கும் நிலை இருந்து வருகிறது.

எனவே திருவள்ளுவர் நகர் குடியிருப்பு பகுதிக்கு அருகில் பொதுப்பணித்துறையில் கட்டுப்பாட்டில் உள்ள தங்கும் விடுதியில் ஆபத்தான மரங்களை வெட்டி அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே பொதுமக்களின் நலன் கருதி குடியிருப்புக்கு அருகில் உள்ள ஆபத்தான மரங்களை அகற்ற உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்