கொன்றைக்காடு கடைவீதியில் ஆபத்தான சாலை சீரமைக்கப்படுமா

கொன்றைக்காடு கடைவீதியில் ஆபத்தான சாலை சீரமைக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

Update: 2022-11-25 19:57 GMT

பேராவூரணி;

கொன்றைக்காடு கடைவீதியில் ஆபத்தான சாலை சீரமைக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

கொன்றைக்காடு சாலை

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள கொன்றைக்காடு கடைவீதியில், பேராவூரணி - பட்டுக்கோட்டை சாலையில், ெரயில்வே கேட் அமைந்துள்ளது. இந்த ெரயில்வே கேட் இருபுறமும் சுமார் 20 மீட்டர் தூரத்திற்கு சாலை கடுமையாக சேதமடைந்துள்ளது. மேலும், பேராவூரணிக்கு வரும் சாலையில் பெரிய குழியும் ஏற்பட்டுள்ளது.இந்த வழியாக தினமும் நூற்றுக்கணக்கான பஸ்கள், கனரக வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் சென்று வருகின்றன. மேலும், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ- மாணவிகள் சைக்கிளில் சென்று வருகின்றனர்.

சீரமைக்க கோரிக்கை

இந்த சாலையில் 2 பக்கமும் சாலை சேதமடைந்த சூழ்நிலையில், கனரக வாகனங்களை இயக்க முடியாத நிலையும், சைக்கிளில் செல்லும் மாணவர்கள் தவறி விழும் சூழலும் உள்ளது. சாலையில் பெரிய பள்ளம் உள்ளதால், புதிதாக வரும் வாகன ஓட்டிகள் தவறி விழுந்து அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே கொன்றைக்காடு கடைவீதியில் ஆபத்தான நிலையில் உள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்