ஆபத்தான மின்கம்பங்களை சீரமைக்க வேண்டும்

பில்லாளி ஊராட்சியில் ஆபத்தான மின்கம்பங்களை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-11-10 18:45 GMT

திட்டச்சேரி:

பில்லாளி ஊராட்சியில் ஆபத்தான மின்கம்பங்களை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆபத்தான மின்கம்பங்கள்

திருமருகல் ஒன்றியம் பில்லாளி ஊராட்சியில் மின்கம்பங்கள் அமைக்கப்பட்டு பில்லாளி ஊராட்சி பகுதிகளுக்கு மின்வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் பில்லாளி, தாதாங்கட்டளை, வடக்குதெரு பகுதிகளில் உள்ள மின்கம்பங்கள் சேதமடைந்து காணப்படுகிறது. கம்பத்தின் சிமெண்டு காரைகள் பெயர்ந்து விழுந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிந்து ஆபத்தான நிலையில் உள்ளது.

தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்

மேலும் மின்கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்கிறது.பெரும்பாலான இடங்களில் மின்கம்பிகளுக்கு பதிலாக காப்பர் வயர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால் காற்று வேகமாக வீசும் நேரத்தில் வயர்கள் அறுந்து மின்தடை ஏற்படுகிறது.

அடிக்கடி இரவு நேரங்களில் மின்தடை ஏற்படுவதால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.மின்கம்பிகள் தாழ்வாக செல்வதால் வாகனங்ளில் உரசி விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பக்கிரிச்சாமி கூறுகையில், தாதங்கட்டளை பகுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன இந்த பகுதிகளில் உள்ள மின்கம்பங்கள் சேதமடைந்து சிமெண்டு காரைகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரியும் ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் எந்நேரத்திலும் மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்து விபத்துக்களை ஏற்படும் நிலை உள்ளது என்றார்.

சீரமைக்க வேண்டும்

அப்பகுதி சேர்ந்த சங்கர் கூறுகையில்:-பில்லாளி ஊராட்சி பகுதிகளில் உள்ள தெருக்களில் அமைக்கப்பட்டுள்ள பெரும்பாலான மின்கம்பங்களில் இருந்து செல்லும் மின்கம்பிகளுக்கு பதிலாக காப்பர் வயர்கள் பொருத்தப்பட்டுள்ள.

காற்று வேகமாக வீசும் நேரங்களில் மின்வயர்கள் அறுந்து இரவு நேரங்களில் பல மணி நேரம் மின்தடை ஏற்படுவதால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ஆபத்தான மின்கம்பங்களையும், தாழ்வாக செல்லும் மின்கம்பிகளையும் சீரமைக்க வேண்டும் என்றார். 

Tags:    

மேலும் செய்திகள்