ஆபத்தான மின்கம்பத்தை மாற்றவேண்டும்
ஆபத்தான மின்கம்பத்தை மாற்றவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நெமிலிைய அடுத்த வேப்பேரி ஊராட்சியில் மின்சார டிரான்ஸ்பார்மர் கம்பம் உடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. அந்தக் கம்பம் எப்போது வேண்டுமானாலும் உடைந்து கீழே விழலாம். இதனால் அந்த வழியாக செல்வோருக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சேதமடைந்த டிரான்ஸ்பார்மர் கம்பத்தை மாற்றி அமைக்க மின்வாரியத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.