கோத்தகிரி- குன்னூர் சாலையில் அதிவேக வாகனங்களால் விபத்து அபாயம்-கண்காணிப்பு கேமரா, வேகத்தடை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

கோத்தகிரி-குன்னூர் சாலையில் அதிவேகத்தில் இயக்கப்படும் வாகனங்களால் அடிக்கடி விபத்துகள் நடக்கிறது. அதனால் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி போலீசார்பணியில் ஈடுபடுவதுடன், அங்கு வேகத்தடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-09-21 18:45 GMT

கோத்தகிரி

கோத்தகிரி-குன்னூர் சாலையில் அதிவேகத்தில் இயக்கப்படும் வாகனங்களால் அடிக்கடி விபத்துகள் நடக்கிறது. அதனால் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி போலீசார்பணியில் ஈடுபடுவதுடன், அங்கு வேகத்தடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோத்தகிரி-குன்னூர் சாலை

கோத்தகிரி பஸ் நிலையத்தில் இருந்து காம்பாய் கடை செல்லும் வழியாக குன்னூர், ஊட்டி மட்டுமின்றி ஏராளமான குக்கிராமங்களுக்கும் அரசு பஸ், மினி பஸ் மற்றும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.

இவ்வழியாக செல்லும் கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் அதிவேகத்தில் இயக்கப்படுகின்றன. இதனால் அடிக்கடி விபத்துகள் நடக்கிறது. இதேபோல் காம்பாய் கடை பகுதியில் இருந்து கோத்தகிரி பஸ் நிலையத்திற்கு நடந்து செல்லும் தொழிலாளர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர்.

கண்காணிக்க வேண்டும்

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:- கோத்தகிரி-குன்னூர் செல்லும் சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றனர். இதில் காலை மற்றும் மாலை நேரங்களில் வாகனங்கள் அதிவேகத்தில் இயக்கப்படுவதால் மாணவர்கள் மற்றும் தேயிலை தொழிலாளர்கள் மிகவும் அச்சபட்டு ரோட்டை கடக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது.

எனவே இப்பகுதியில் கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்தி போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு, அதிவேகத்தில் இயக்கும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், காம்பாய் கடை பகுதியில் உள்ள சாலையில் வேகத்தடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்