"ஆடலும் பாடலும் நிகழ்ச்சிக்கு அனுமதி தர முடியாது" - ஐகோர்ட்டு மதுரை கிளை திட்டவட்டம்
ஆடல், பாடல் கலை நிகழ்ச்சி நடத்த அனுமதி கோரிய மனுக்களை தள்ளுபடி செய்து ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
மதுரை,
ஆடல், பாடல் கலை நிகழ்ச்சி நடத்த அனுமதி கோரிய மனுக்களை தள்ளுபடி செய்து ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. மதுரை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 40 க்கும் மேற்பட்ட மனுதாரர்களின் மனுக்கள், நீதிபதி தாரணி முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது , கோவில் திரு விழாக்கள் வழக்கம் போல் நடைபெறலாம் என்றும், ஆனால் ஆடல், பாடல் கலை நிகழச்சிக்கு அனுமதி தர இயலாது என நீதிபதி தெரிவித்தார்.
அதே நேரத்தில், ஆடல் பாடல் கலை நிகழ்ச்சி நடத்த அனுமதி கோரிய மனுக்களுக்கு வாய்தா வாங்கி கொள்ள அவகாசம் வழங்கி, வாய்தாக கேட்காத மற்ற மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.