பூங்காவில் சேதமடைந்து கிடக்கும் விளையாட்டு உபகரணங்கள்
பூங்காவில் விளையாட்டு உபகரணங்கள் சேதமடைந்து கிடப்பதால் பொழுது போக்க வழியின்றி சிறுவர்கள் தவித்து வருகின்றனர்;
நெகமம்
பூங்காவில் விளையாட்டு உபகரணங்கள் சேதமடைந்து கிடப்பதால் பொழுது போக்க வழியின்றி சிறுவர்கள் தவித்து வருகின்றனர்.
உடல்பருமன்
மனிதர்களின் ஆரோக்கியத்தில் விளையாட்டிற்கு முக்கிய பங்கு உண்டு. கடந்த காலங்களில் கிராமப்புற பகுதிகளில் பல்வேறு வகையான விளையாட்டுகள் இருந்தன.
இதனால் சிறுவர்கள் உடல் ஆரோக்கியத்துடன் காணப்பட்டனர். ஆனால் தற்போது மைதானத்திற்கு சென்று வியர்க்க வியர்க்க விளையாடும் சிறுவர்களை காண முடியாத நிலை உள்ளது.
மேலும் வீட்டிற்குள்ளே இருந்து செல்போன், டி.வி. என்று அமர்ந்தவாறு தங்களின் பொழுதுகளை போக்கு கின்றனர். இதனால் அவர்கள் உடல்பருமன் மட்டுமின்றி மனரீதியாக பல சிக்கல்களை சந்திக்கின்றனர்.
சிறுவர் பூங்கா
இது போன்ற குறைபாடுகளை தவிர்த்து சிறுவர்கள் ஓடி, ஆடி விளையாட வசதியாக கிராமம். பேரூராட்சி, நகர பகுதிகளில் பூங்கா, விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்பட்டன.
ஆனால் பல இடங்களில் பூங்கா, மைதானம் போன்றவை சரி யான பராமரிப்பு இன்றி காணப்படுகிறது. மேலும் புதர் மண்டி யும், விளையாட்டு உபகரணங்கள் உடைந்து சேதப்படுத்தப்பட்டும் கிடக்கிறது.
இதில் கிணத்துக்கடவு ஒன்றியம் சோழனூர் ஊராட்சியில் உள்ள ஒரு பூங்காவில் ஊஞ்சல், சறுக்கு, ஏணி உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்கள் சேதமடைந்து கிடக்கிறது. இது போல் ஒன்றியத்தில் உள்ள பல ஊராட்சிகளிலும் விளையாட்டு பூங்காக்கள் பயன்படாமல் உள்ளன.
பராமரிக்க வேண்டும்
இதனால் விளையாடி பொழுதை கழிக்க முடியாமல் சிறுவர் கள் தவித்து வருகின்றனர். எனவே விளையாட்டு பூங்காக்க ளில் புதர்களை வெட்டி அகற்ற வேண்டும். மேலும் அங்குள்ள விளையாட்டு உபகரணங்களை சரி செய்து முறையாக பராமரிக்க வேண்டும்.
அப்போது தான் சிறுவர்கள் அங்கு சென்று விளையாடுவதற்கு ஆர்வம் காட்டு வார்கள். எனவே ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்து பூங்காக்களை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.