சேதமான மின்கம்பத்தை மாற்றவேண்டும்
சேதமான மின்கம்பத்தை மாற்றவேண்டும்என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாட்டறம்பள்ளியை அடுத்த எல்வப்பள்ளி கூட்ரோடு அருகே நாட்டறம்பள்ளி-திருப்பத்தூர் செல்லும் சாலையோரம் உள்ள ஒரு மின்கம்பத்தின் சிமெண்டு பூச்சு உதிர்ந்து எலும்பு கூடாக காட்சி அளிக்கிறது. இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் இது வரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.