சேதமடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி

சேதமடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அகற்ற கோரிக்கை வைக்கப்பட்டது.;

Update:2023-09-24 00:15 IST

முதுகுளத்தூர்,

முதுகுளத்தூர் அருகே உள்ள ராமலிங்கபுரம் கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் உள்ளனர். இந்த பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு ஆழ்துளை கிணறு அமைத்து 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. தற்போது இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மிகவும் பழுதடைந்து எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. சுற்று சுவர்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளது. இந்த தொட்டியின் அருகில் அங்கன்வாடி மையம் உள்ளது. இதனால் அங்கன்வாடிகளுக்கு குழந்தைகளை அனுப்பும் பெற்றோர் அச்சத்தில் உள்ளனர். மேலும் தொட்டி சாலை அருகே இருப்பதால் வாகன ஓட்டிகளும் அச்சத்துடன் செல்கின்றனர்.

இதுகுறித்து ஊராட்சி தலைவர் செந்தில் கூறுகையில், சேதமடைந்த நீர்த்தேக்க தொட்டி குறித்து பலமுறை அதிகாரிகளிடம் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே பழுதடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அகற்றி விட்டு புதிய தொட்டி அமைக்க வேண்டும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்