சேதமடைந்த பாசன வாய்க்கால் மதகு-தரைப்பால தடுப்பு சுவர்

சேதமடைந்த பாசன வாய்க்கால் மதகு-தரைப்பால தடுப்பு சுவர்

Update: 2022-08-26 17:41 GMT

கூத்தாநல்லூர்

கூத்தாநல்லூர் வடபாதிமங்கலம் சாலையின் இடையே நாகங்குடி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தையொட்டி வெண்ணாற்றின் கரையோரத்தில் அந்த பகுதியில் உள்ள 100 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் சாகுபடி பணிகளை மேற்கொள்ள ஏதுவாக, பாசன வாய்க்கால் மூலம் ஆற்றில் இருந்து வரும் தண்ணீரை கொண்டு செல்வதற்கு பாசன வாய்க்கால் மதகு மற்றும் தரைப்பாலம் தடுப்பு சுவருடன் சாலையின் குறுக்கே கட்டப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக பாசன வாய்க்கால் மதகு மற்றும் தரைப்பால தடுப்பு சுவர் சேதமடைந்துள்ளது. இதனால் பாசன வாய்க்கால் மதகு சரிந்து விழும் நிலையில் உள்ளது. மேலும் ஆபத்தான வளைவில் சேதமடைந்த பாசன வாய்க்கால் மதகு உள்ளதால் சாலையில் எதிர்பாராதவிதமாக மண் சரிவு ஏற்பட்டு விபரீதம் ஏற்படுமோ? என வாகன ஓட்டிகள் அச்சத்துடன் உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சேதமடைந்த பாசன வாய்க்கால் மதகு மற்றும் தரைப்பால தடுப்பு சுவரை சீரமைக்க வேண்டும். இல்லையெனில் அதனை அகற்றி விட்டு அதே இடத்தில் உள்ள ஆபத்தான வளைவில் குறுகலான சாலையை அகலப்படுத்தி புதிய மதகு மற்றும் தரைப்பாலம் கட்டித்தர வேண்டும் என்று வாகன ஓட்டிகள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்