சேதம் அடைந்த வாய்க்கால் கதவணையை சீரமைக்க வேண்டும்

திருமருகல் அருகே சேதம் அடைந்த கதவணையை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-07-19 18:45 GMT

திட்டச்சேரி:

திருமருகல் அருகே சேதம் அடைந்த கதவணையை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வாய்க்கால் கதவணை

நாகை மாவட்டம் திருமருகல் அருகே வடகரை ஊராட்சி தென்கரை வழியாக செல்லும் தென்கரை பாசன வாய்க்கால் வடக்கு புத்தாற்றில் இருந்து பிரிந்து செல்கிறது. இந்த வாய்க்காலின் மூலம் 50 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனம் பெறுகிறது. இந்த நிலையில் தென்கரை பாசன வாய்க்காலில் தலைப்பில் கதவணை சேதம் அடைந்து காணப்படுகிறது.

இதனால் விவசாயத்திற்கு தேவையான தண்ணீரை உரிய நேரத்தில் பெறுவது சிரமமாக இருப்பதாகவும், ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது வாய்க்காலுக்கு வரும் தண்ணீர் வயல்களுக்குள் புகுந்து பயிர்கள் பாதிக்கப்படுவதாகவும் விவசாயிகள் கவலை தெரிவிக்கிறார்கள்.

நடவடிக்கை

இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதம் அடைந்த வாய்க்கால் கதவணையை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்