போடிமெட்டு மலைப்பாதையில் சேதமடைந்த தடுப்புச்சுவர்
போடிமெட்டு மலைப்பாதையில் சேதமடைந்த தடுப்புச்சுவரை சீரமைக்க கோரிக்கை வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
போடிமெட்டு மலைப்பாதையில் எஸ்-வளைவு அருகே கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சுற்றுலா வேன் ஒன்று சாலையோர தடுப்புச்சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், தடுப்புச்சுவர் இடிந்து சேதமடைந்தது. ஆனால் சேதமடைந்த தடுப்புச்சுவரை சீரமைக்க இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மாறாக தடுப்பு கம்பிகள் அமைத்துள்ளனர்.
தினமும் ஏராளமான வாகனங்கள் இந்த மலைப்பாதை வழியாக கேரளாவுக்கு சென்று வருகின்றன. இதற்கிடையே தடுப்புச்சுவரை சீரமைக்காததால் மீண்டும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே போடிமெட்டு மலைப்பாதையில் சேதமடைந்த தடுப்புச்சுவரை சீரமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.