உடுமலை தளி சாலையில் உள்ள ரெயில்வே சுரங்கப்பாதை குண்டும், குழியுமாக உள்ளதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

உடுமலை தளி சாலையில் உள்ள ரெயில்வே சுரங்கப்பாதை குண்டும், குழியுமாக உள்ளதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

Update: 2022-11-27 12:39 GMT

உடுமலை

உடுமலை தளி சாலையில் உள்ள ரெயில்வே சுரங்கப்பாதை குண்டும், குழியுமாக உள்ளதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

குண்டும், குழியுமானரெயில்வே சுரங்கப்பாதை

உடுமலை தளி சாலையில் காந்தி சதுக்கம் பகுதியில் ரெயில்வே மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலத்தின் மேற்குபுறம் உள்ள அணுகு சாலையில், ரெயில்வே தண்டவாளத்திற்கு கீழ் சுரங்கப்பாதை உள்ளது. இந்த சுரங்கப்பாதை வழியாக கார், வேன், ஆட்டோ, இருசக்கர வாகனங்கள் சென்று வருகின்றன. நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்த சுரங்கப்பாதையின் தெற்குபகுதியில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், அரசு கலைக்கல்லூரி, ஆர்.டி.ஓ.அலுவலகம், வட்டார போக்குவரத்து அலுவலகம் மற்றும் ஏராளமான குடியிருப்பு பகுதிகள், கிராமப்புறங்கள் உள்ளன.

இந்த சுரங்கப்பாதையின் வடக்கு பகுதியில் உள்ளவர்கள் தெற்கு பகுதிக்கு சென்று வருகின்றனர். அதேபோன்று தெற்கு பகுதியில் உள்ள பொதுமக்கள் அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களுக்கும், மாணவ- மாணவிகள் பள்ளிகளுக்கும் இந்த சுரங்கப்பாதை வழியாக வந்து செல்கின்றனர். அதனால் இந்த சுரங்கப்பாதை வழியாக வாகன போக்குவரத்து அதிகம் இருக்கும். அத்துடன் பொதுமக்கள், பள்ளி மாணவ-மாணவிகள் நடந்தும் சென்றுவருவதுண்டு.

வாகன ஓட்டிகள் அவதி

அவ்வாறான இந்த சுரங்கப்பாதையின் மையப்பகுதியில் உள்ள தளம் பல மாதங்களாக குண்டும், குழியுமாக உள்ளது. அதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுனர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். ஆனால் இந்த சுரங்கப்பாதை சீரமைக்கப்படாததால், குண்டும்,குழியுமான இடங்கள் பெரிதாகியுள்ளது. அந்த குழிகளுக்குள் தண்ணீர் தேங்கி நிற்கிறது. அதனால் வாகன ஓட்டுனர்கள் அடிக்கடி கீழே விழுந்து விபத்துள்ளாகி வருகின்றனர். இந்த சுரங்கப்பாதை நெடுஞ்சாலைத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதாகக்கூறப்படுகிறது. இந்த சுரங்கப்பாதையில் குண்டும் குழியுமாக உள்ள தளம் பகுதியில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் எதிர்பார்க்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்