நெற்பயிர்கள் சேதம்; நிவாரணம் வழங்க கோரிக்கை
நெற்பயிர்கள் சேதம்; நிவாரணம் வழங்க கோரிக்கை விடுத்தனர்.
காரையூர் அருகே ஆலம்பட்டி ஊராட்சி ஆதினிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா. இவருக்கு சொந்தமான 1 ஏக்கர் வயலில் நடவு செய்யப்பட்டுள்ள நெற்பயிர்கள் தொடர் மழையால் சாய்ந்துள்ளது. மேலும் நெற்பயிர்கள் தண்ணீர் மூழ்கியும் காணப்படுகிறது. மேலும் அப்பகுதியில் உள்ள நெற்பயிர்களும் சேதமடைந்துள்ளது. இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.