மேற்கூரை இடிந்து விழுந்து பொருட்கள் சேதம்
நரிக்குடி அருகே மேற்கூரை இடிந்து விழுந்து பொருட்கள் சேதமானது.
காரியாபட்டி,
நரிக்குடி ஒன்றியம் அ.முக்குளம் வருவாய் குறுவட்டத்திற்கு உட்பட்ட உண்டுருமி கிடாக்குளம் குரூப் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருபவர் கார்த்திகேயன். இவர் வழக்கம்போல அலுவலகத்திற்கு வந்து தனது பணிகளை கவனித்து வந்துள்ளார். இந் நிலையில் கிராம நிர்வாக அதிகாரி கார்த்திகேயன் பணி நிமிர்த்தம் காரணமாக அ.முக்குளம் போலீஸ் நிலையத்திற்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் உண்டுறுமி கிடாக்குளம் கிராம நிர்வாக அலுவலகத்தின் சேதமடைந்த மேற்கூரையானது திடீரென இடிந்து விழுந்ததது. இதில் அலுவலகத்தினுள் இருந்த பொருட்கள் சேதமடைந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.