நோய் தாக்குதலால் மணிலா பயிர்கள் பாதிப்பு

நோய் தாக்குதலால் மணிலா பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Update: 2022-08-29 18:43 GMT

சின்னசேலம், 

சின்னசேலம் மற்றும் அதனை சுற்றியுள்ள அம்மையகரம், தென்பொன்பரப்பி, நாககுப்பம், மறவாநத்தம், நமசிவாயபுரம், கனியாமூர் உள்ளிட்ட கிராமங்களில் விவசாயிகள் அதிக நிலப்பரப்பில் மணிலா சாகுபடி செய்து பராமரித்து வந்தனர். பயிர்கள் நன்கு வளர்ந்து வந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் நோய் தாக்குதலால் தற்போது பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ஒரு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ.30 ஆயிரம் வரை செலவு செய்து மணிலாவை பராமரித்து வந்தோம். ஆனால் நோய் தாக்குதலால் மணிலா பயிரி்ன் இலைகள் மஞ்சள் நிறமாக மாறியுள்ளது. இதனால் மகசூல் குறையும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் எங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. இதனால் நாங்கள் கவலை அடைந்துள்ளோம். இதை தவிர்க்க நோய் தாக்குதலால் பாதிக்கப்பட்ட எங்களது பயிர்களை அதிகாரிகள் பார்வையிட்டு உரிய ஆலோசனை வழங்க வேண்டும் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்