உயர் மின்அழுத்தம் காரணமாக 20 வீடுகளில் மின்சாதன பொருட்கள் சேதம்
வந்தவாசி அருகே உயர் மின்அழுத்தம் காரணமாக 20 வீடுகளில் மின்சாதன பொருட்கள் சேதம் அடைந்தது.
வந்தவாசி
வந்தவாசி அடுத்த கொசப்பட்டு கிராமத்தில் சூறாவளி காற்றுடன் மழை பெய்தது.
இதன் காரணமாக 2 நாட்களாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. தொடர்ந்து மின்சாரம் இல்லாத காரணத்தால் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர்.
இந்த நிலையில் நேற்று இரவு திடீரென மின் இணைப்பு வந்த போது உயர் மின்அழுத்தம் காரணமாக 20-க்கும் மேற்பட்ட வீடுகளில் டி.வி., பிரிட்ஜ், மினிவிசிறி, மின்விளக்குகள் உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் சேதமடைந்து பழுதானது.
மின்மாற்றிகள் சீராக இயங்கவும் மின்சாரம் தடையில்லாமல் வழங்கவும் மின்சாரத்துறைக்கு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.