பயிர்கள் தீயில் கருகி சேதம்

திசையன்விளை அருகே பயிர்கள் தீயில் கருகி சேதம் அடைந்தன.

Update: 2023-02-24 19:54 GMT

திசையன்விளை:

திசையன்விளையை அடுத்த அழகியவிளையில் ஜெயராஜ், கனகராஜ், அருள்ராஜ், ராஜேஷ், அற்புதமணி ஆகியோருக்கு சொந்தமான தோட்டங்கள் உள்ளன. அதில் முருங்கை, தென்னை, கொய்யா ஆகியவை பயிரிடப்பட்டு இருந்தது. நேற்று திடீரென்று அந்த பயிர்களில் தீப்பிடித்து எரிந்தது. அப்போது காற்று வேகமாக வீசியதால் தீ மளமளவென பரவியது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் திசையன்விளை தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும், இந்த தீவிபத்தில் சுமார் 15 ஏக்கரில் பயிரிடப்பட்டு இருந்த பயிர்கள் தீயில் கருகி சேதம் அடைந்தன. தீ விபத்துக்கான காரணம் குறித்து தட்டார்மடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்