தொடர் மழையால் பருத்தி செடிகள் சேதம்

தேவூர் பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பருத்தி செடிகள் தண்ணீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளது.

Update: 2023-05-09 19:40 GMT

தேவூர்

தேவூர் பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பருத்தி செடிகள் தண்ணீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளது.

பருத்தி சாகுபடி

சேலம் மாவட்டம் தேவூர் அருகே கல்வடங்கம், கொட்டாயூர், சென்றாயனூர், பெரமச்சிபாளையம், ஒடசக்கரை, நல்லங்கியூர், மேட்டுப்பாளையம், ரெட்டிபாளையம், வெள்ளாளபாளையம், செட்டிபட்டி, புள்ளாக்கவுண்டம்பட்டி, பொன்னம்பாளையம், உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பருத்தி சாகுபடி செய்துள்ளனர்

இந்த நிலையில் வயல்களில் கோடை வெயிலால் பருத்தி செடிகள் செழித்து வளர்ந்து வந்தது. தேவூர் பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் கனமழையினால் பருத்தி வயல்களில் தண்ணீர் தேங்கியது. இதனால் பருத்தி செடிகள் வளர்ச்சி குன்றி பழுப்பு நிறமாக மாறி பூக்கள் உதிர்ந்து வருகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

அதிகளவில் ஈரப்பதம்

இதுகுறித்து நல்லங்கியூர் பகுதி விவசாயிகள் கூறியதாவது:- பருத்தி சாகுபடி செய்யப்பட்ட வயல்களில் அதிகளவில் ஈரப்பதம் இருப்பதால் செடிகள் பாதிப்படைந்துள்ளது. பருத்தி சாகுபடி செய்யப்பட்ட வயல்களில் பராமரிப்பு பணிக்கான செலவுகள் அதிகரித்துள்ள நிலையில் தொடர் மழையினால் பருத்தி செடிகள் பழுப்பு நிறமாக மாறி வாடு வருகிறது.

இதேபோல் விவசாயிகள் சாகுபடி செய்துள்ள சோளம், பச்சை பயிறு, வெண்டை, உள்ளிட்ட வயல்களில் மழைநீர் சூழ்ந்து சேதமடைந்துள்ளது என்றனர்.

மேலும் செய்திகள்