6 ஆயிரம் வாழை மரங்கள் சேதம்

6 ஆயிரம் வாழை மரங்கள் சேதம் அடைந்தன.

Update: 2023-04-23 18:45 GMT

கமுதி, 

கமுதி அருகே கோரைப்பள்ளம், ராமசாமிபட்டி, கிளாமரம், நீராவி மேலராமநதி, காவடிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று திடீரென கருமேகம் சூழ்ந்தது. பின்னர் மழை பெய்ய தொடங்கியது. நேரம் செல்ல செல்ல சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பலத்த காற்றுடன் மழை பெய்தது. இந்த சூறைக்காற்று மழையால் அப்பகுதியில் 300-க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்ட வாழை மரங்கள் சாய்ந்து சேதமடைந்தன.

கோரைப்பள்ளத்தை விவசாயிகள் ராமர், சுப்பிரமணி, கந்தசாமி, வீரமணி ஆகியோரது நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த சுமார் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்து சேதம் அடைந்தன. இதனால் அப்பகுதி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

மேலும் அவர்கள் கூறும்போது, ஏக்கர் ஒன்றுக்கு ரூபாய் 20 ஆயிரம் வரை செலவு செய்து அறுவடைக்கு தயாராக இருந்த நாட்டு வாழைக்காய் வாழை மரங்கள் முறிந்தும் வேரோடு சாய்ந்து விழுந்துள்ளன என்றார். அதேபோல் பாறைகுளம் பகுதியில் விவசாயி கருப்பையா என்பவரின் தோட்டத்தில் இருந்த 200-க்கு மேற்பட்ட எலுமிச்சை மரங்கள் வேரோடு சாய்ந்தன. எனவே, மாவட்ட நிர்வாகம் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்