கருங்கல் சாலையில் அவதிப்படும் விடையல் அக்ரஹார தெரு மக்கள்

வலங்கைமான் அருகே கருங்கல் சாலையில் அவதிப்படும் விடையல் அக்ரஹார தெரு மக்களின் துன்பம் தீர விரைவில் சாலையை சீரமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-11-21 19:15 GMT

வலங்கைமான்;

வலங்கைமான் அருகே கருங்கல் சாலையில் அவதிப்படும் விடையல் அக்ரஹார தெரு மக்களின் துன்பம் தீர விரைவில் சாலையை சீரமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சேதமடைந்த சாலை

திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் ஊராட்சி ஒன்றியம் கீழவிடையல் ஊராட்சியில் விடையல் அக்கரஹாரம் தெருவில் பல ஆண்டுகளாக சாலை சீரமைக்கப்படவில்லை.இதனால் சாலை சேதமடைந்து குண்டும்- குழியுமாக கருங்கல் சாலையாக காட்சி அளிக்கிறது. இதனால் இந்த வழியாக செல்லும் மக்கள் மிகுந்த இடையூறுகளை சந்திக்கிறார்கள். குறிப்பாக இருசக்கர வாகனங்களில் இந்த வழியாக செல்லும் போது டயர்கள் பஞ்சராகி அவதிப்படுகிறார்கள்.

விரைவில் சீரமைக்க கோரிக்கை

சாலை முழுவதும் கருங்கற்களுடன் குண்டும்- குழியுமாக உள்ளதால் நடந்து செல்பவர்களும் சிரமத்தை சந்திக்கிறார்கள். இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள். எனவே வலங்கைமான் அருகே கருங்கல் சாலையில் அவதிப்படும் விடையல் அக்ரகார தெரு மக்கள் நலன் கருதி சாலையை விரைவில் சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்