சேதமடைந்துள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும்

தஞ்சையில் வெவ்வேறு இடங்களில் சேதமடைந்துள்ள சாலைகளை சீரமைக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-11-04 21:40 GMT

தஞ்சாவூர்;

தஞ்சையில் வெவ்வேறு இடங்களில் சேதமடைந்துள்ள சாலைகளை சீரமைக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குந்தவைநாச்சியார் அரசு மகளிர் கல்லூரி

தஞ்சை-திருச்சி சாலையில் கலெக்டர் பங்களா எதிரில் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரிக்கு தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்தும், தஞ்சை அருகே உள்ள மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான மாணவிகள் படித்து வருகின்றனர். கலெக்டர் பங்களா முதல் சத்யா ஸ்டேடியம் வரை கல்லூரி வழியாக தார் சாலை உள்ளது.இந்த சாலையில் கல்லூரி மாணவிகள் விடுதி, உள்ளிட்ட அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் உள்ளன. மேலும் 100-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். தற்போது இந்த சாலை சேதமடைந்து, குண்டும் குழியுமாக காணப்படுகிறது. மழைக்காலங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கி கிடப்பதால் இருசக்கர வாகனங்களில் வருவோர் பள்ளங்கள் இருப்பது தெரியாமல் விபத்துகளில் சிக்கி வருகின்றனர். இதனால் அந்த வழியாக செல்லும் வாகனஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.

வாகன ஓட்டிகள் சிரமம்

இதே போல் கிழவாசல் மன்னர் சரபோஜி மார்க்கெட் அருகே உள்ள 4 சந்திப்பு சாலை சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் இந்த சாலையில் வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், தஞ்சை பழைய பஸ்நிலையத்தில் இருந்து மகர்நோம்புச்சாவடி, தொம்பன்குடிசை, கீழவாசல், உள்ளிட்ட பகுதிகளுக்கு சரபோஜி மார்க்கெட் வழியாக ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.இந்த போக்குவரத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த சாலை என்பதால் எப்போதும் போக்குவரத்து நெரிசல் இருந்து கொண்டே இருக்கும். 4 சாலை சந்திப்பில் சாலை சேதமடைந்து இருப்பதால் இந்த வழியாக செல்லும் வாகனஓட்டிகளை சிரமப்பட்டு வருகின்றனர். மழைக்காலங்களில் இந்த பகுதியில் தண்ணீர் தேங்கி குளம் போல் காட்சி அளிக்கிறது. பள்ளங்கள் இருப்பது தெரியாமல் கீழே விழுந்து அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மேற்கண்ட பகுதிகளில் சேதமடைந்து காணப்படும் சாலைகளை சீரமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்