தளி
சேதமடைந்துள்ள பி.ஏ.பி. பிரதான கால்வாய் சீரமைக்கப்படுமா என்று விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
பி.ஏ.பி. கால்வாய்
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியை நீராதாரமாகக் கொண்டு அப்பர்நீராறு, லோயர் நீராறு, சோலையார், ஆனைமலையாறு பரம்பிக்குளம், தூணக்கடவு, பெருவாரி பள்ளம், ஆழியார், அப்பர்ஆழியார், திருமூர்த்தி உள்ளிட்ட அணைகள் கட்டப்பட்டன. திருமூர்த்தி அணையை ஆதாரமாகக் கொண்டு கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் 3 லட்சத்து 76 ஆயிரத்து 152 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இதில் அம்மாபட்டிகுளம், செங்குளம், பெரியகுளம், வளையபாளையம் குளம், ஒட்டுகுளம் உள்ளிட்ட ஏழு குளங்களும் அடங்கும். திருமூர்த்தி அணை நீர் இருப்பு குறைந்து வருகின்றபோது பி.ஏ.பி. தொகுப்பு அணைகளில் இருந்து காண்டூர் கால்வாய் மூலமாக தண்ணீர் வந்து சேரும்.
பி.ஏ.பி. பாசன திட்டத்தில் 125 கிலோமீட்டர் நீளம் உடைய பிரதான கால்வாய் பராமரிப்பு இல்லாமல் சேதமடைந்து விட்டதாக கூறப்படுகிறது. கால்வாய் ஒரு சில பகுதிகளில் முற்றிலுமாக சேதமடைந்து உள்ளது. கால்வாய் மற்றும் வாய்க்கால்களை சீரமைக்ககோரி விவசாயிகள் தரப்பில் தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
கோரிக்கை
கால்வாய் சீரமைக்கப்படாததால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் போது விவசாயிகளிடையே வாக்குவாதம் மோதல்கள் ஏற்பட்டு வருவதும் தொடர்கதையாக உள்ளது. அணையில் திறக்கப்படுகின்ற போது தண்ணீர் கடைமடை வரையிலும் விரயமாகாமல் சென்றால் தான் விவசாயத் தொழில் நல்ல முறையில் நடைபெறும். எனவே பி.ஏ.பி. பாசன திட்டத்தின் உயிர்நாடியான விளங்கி வருகின்ற பிஏபி பிரதான கால்வாயின் சேதமடைந்த பகுதிகளை சீரமைப்பதற்கு அதிகாரிகள் முன்வர வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
---
3 காலம்
சர்க்கார் புதூர் ஷட்டர் அருகே பிஏபி பிரதான கால்வாய் சேதமடைந்து உள்ளது காணலாம்