பழுதடைந்த அங்கன்வாடி மையம் சீரமைக்கப்படுமா?

வலங்கைமான் அருகே பழுதடைந்த அங்கன்வாடி மையம் சீரமைக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Update: 2022-08-19 18:13 GMT

வலங்கைமான்;

வலங்கைமான் அருகே பழுதடைந்த அங்கன்வாடி மையம் சீரமைக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

அங்கன்வாடி மையம்

திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் ஒன்றியத்திற்கு உட்பட்ட மேல விடையல் ஊராட்சி, குப்பை சமுத்திரம் கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.இங்குள்ள குழந்தைகளின் நலன்கருதி மெயின்ரோடு அருகே அங்கன்வாடி மையம் ஒன்று கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இந்த கட்டிடம் போதிய பராமரிப்பு இல்லாததால் கட்டிடத்தின் மேல் கூரை, தரைத்தளம், சுற்றுச்சுவர் என அனைத்து பகுதிகளும் சேதமடைந்துள்ளன. கட்டிடத்தில் உள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்து விழுகின்றன.

சீரமைக்கப்படுமா?

இதன் காரணமாக இந்த அங்கன்வாடி மைய கட்டிடம் அருகே உள்ள மகளிர் சுயஉதவிக்குழு கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது. அந்த கட்டிடமும் பழுதடைந்துள்ளதால் தற்போது வாடகை வீட்டில் அங்கன்வாடி மையம் செயல்படுகிறது.ஆகவே பயன்பாடின்றி உள்ள அங்கன்வாடி மைய கட்டிடத்தை துறை சார்ந்த அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு சீரமைத்துக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்