இடிந்து விழும் நிலையில் உள்ள பழமையான நடைபாலம்

கொள்ளிடம் அருகே கீரங்குடியில் இடிந்து விழும் நிலையில் உள்ள பழமையான நடைபாலத்தை இடித்து அகற்றிவிட்டு புதிய பாலம் கட்ட வேண்டும் என்று மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-05-26 19:00 GMT

கொள்ளிடம்;

கொள்ளிடம் அருகே கீரங்குடியில் இடிந்து விழும் நிலையில் உள்ள பழமையான நடைபாலத்தை இடித்து அகற்றிவிட்டு புதிய பாலம் கட்ட வேண்டும் என்று மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

50 ஆண்டுகள் பழமையான நடைபாலம்

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே சோதியக்குடி ஊராட்சி கீரங்குடி கிராமத்தில் தெற்கு ராஜன் வாய்க்கால் குறுக்கே நடைபாதை பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலம் கட்டப்பட்டு சுமார் 50 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. வாய்க்காலில் அடிப்பகுதி இரும்பு தூண்களால் கட்டப்பட்டு மேற்பகுதியில் சிமெண்டு கான்கிரீட் கட்டைகள் பொருத்தப்பட்டுள்ளன.இந்த பாலத்தின் அடிப்பகுதியில் அமைந்துள்ள இரும்பு தூண்கள் மிகப் பழமையானதால் முறிந்து விழும் நிலையில் உள்ளது. நடை பாலத்தின் மேல் பகுதியில் உள்ள கைப்பிடி கம்பிகளும் துருப்பிடித்து முறிந்து விழும் நிலையில் உள்ளது.

ஆம்புலன்ஸ் வாகனங்கள்

கொன்னகாட்டுப்படுகை, கீரங்குடி உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இந்த பாலத்தை கடந்து வந்து கொள்ளிடம் மற்றும் சீர்காழி பகுதிக்கு சென்று வருகின்றனர். நடந்து செல்லும் வகையில் இந்த பாலம் அமைக்கப்பட்டுள்ளது.இதனால் அவசர காலத்தில் அப்பகுதியில் 108 ஆம்புலன்ஸ், கார் போன்ற வாகனங்கள் வர முடியாத நிலை உள்ளது. மேலும் அப்பகுதியில் உள்ள கால்நடைகள் இந்த நடைபாைதயை கடந்து ஆற்றின் கரை பகுதிக்கு வந்த மேய்ந்து விட்டு மீண்டும் மாலையில் இந்த பாலத்தின் வழியே கிராமங்களுக்கு செல்கின்றன. அப்பகுதியை சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் சைக்கிள் மற்றும் மோட்டார் சைக்கிள் மூலம் இந்த நடைபாலத்தை கடந்து சென்று வருகின்றனர்.

புதிய கான்கிரீட் பாலம்

தற்போது இந்த பாலத்தின் வழியே நடந்து செல்லும்போது, பாலம் சேதமடைந்து உள்ளதால் இதன் வழியே செல்பவர்கள் மிகுந்த அச்சத்துடன் சென்று வருகின்றனர். கொன்னக்காட்டுபடுகை, கீரங்குடி ஆகிய கிராமங்களை சேர்ந்த மக்கள் இறந்தவர்கள் உடல்களை இந்த நடைபாதை பாலத்தின் வழியே சுமந்து சென்று தான் மயானத்தில் அடக்கம் செய்து வருகின்றனர். இந்த பாலம் நடைபாலமாக இருந்து வருவதால் அமரர் ஊர்தி உள்ளிட்ட வாகனங்கள் மூலம் இறந்தவரின் உடல்களை எடுத்து செல்ல முடியவில்லை. இதனால் மக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.எனவே கொள்ளிடம் அருகே சோதியக்குடி ஊராட்சி கீரங்குடி கிராமத்தில் தெற்கு ராஜன் வாய்க்கால் குறுக்கே சேதமடைந்த நிலையில் உள்ள நடைபாதை பாலத்தை இடித்து அகற்றிவிட்டு அனைத்து கனரக வாகனங்கள் சென்று வரும் வகையில் புதிய கான்கிரீட் பாலம் கட்டித்தர வேண்டும் என்று மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்