பால் உற்பத்தியாளர்கள் கறவை மாடுகளுடன் ஆர்ப்பாட்டம்

பால் உற்பத்தியாளர்கள் கறவை மாடுகளுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2022-10-19 19:06 GMT

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்க தொட்டியம் வட்ட குழு சார்பில் பால் விலை கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க கோரி தொட்டியம் தாலுக்கா அலுவலகம் முன்பு கறவை மாடுகளுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணை தலைவர் வரதராஜன் தலைமை தாங்கினார். வட்டக் குழு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் பால் உற்பத்தியாளர்கள் சங்க மாநில செயலாளர் ராமநாதன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சத்தியமூர்த்தி, விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் முருகன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் பால் கொள்முதல் விலையை ஒரு லிட்டருக்கு 10 ரூபாய் உயர்த்தி வழங்க வேண்டும். பாக்கி பால் பணம், ஊக்கத்தொகை மற்றும் போனஸ் ஆகியவற்றை தீபாவளிக்கு முன்பாக வழங்கிட வேண்டும், பால் உற்பத்தியாளர்களுக்கு 50 சதவீத மானியத்தில் மாட்டுதீவனம் வழங்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் தொட்டியம் வட்ட தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்