பொய்கை வாரச்சந்தையில் விற்பனைக்கு குவிந்த கறவை மாடுகள்

பொய்கை வாரச்சந்தையில் கறவை மாடுகள் விற்பனைக்கு குவிந்ததால் விற்பனை விறுவிறுப்பாக இருந்தது.

Update: 2022-07-19 18:23 GMT

அணைக்கட்டு

பொய்கை வாரச்சந்தையில் கறவை மாடுகள் விற்பனைக்கு குவிந்ததால் விற்பனை விறுவிறுப்பாக இருந்தது.

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு ஒன்றியத்திற்கு உட்பட்ட பொய்கை ஊராட்சியில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை வாரச்சந்தை நடக்கிறது. இந்த சந்தையில் வெளியூர் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான மாடுகள், ஆடுகள், கோழிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. மேலும் மாலையில் காய்கறி சந்தையும் நடக்கிறது. ஒரே நாளில் ரூ.2 கோடிக்கு மேல் இந்த சந்தையில் வர்த்தகம் நடக்கிறது.

கடந்த வாரம் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இறைச்சிக்காக மாடுகள் அதிகளவில் வந்தன. நேற்று நடந்த வாரச்சந்தையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கறவை மாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்தன. வியாபாரிகள் போட்டி போட்டுக்கொண்டு கறவை மாடுகளை விலைக்கு வாங்கினர். இதனால் இந்த வாரம் வியாபாரம் களைகட்டியதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

உயர் ரக கறவை மாடுகள் அதிகமாக விற்பனையாகின. மாலையில் காய்கறி சந்தை நடந்தது. ஒரு கிலோ தக்காளி 10 ரூபாய்க்கும், கத்தரிக்காய் 60 ரூபாய்க்கும் விற்பனையானது.

Tags:    

மேலும் செய்திகள்