'தினத்தந்தி' செய்தி எதிரொலி:சங்கம்துறை பகுதியில் சாலை சீரமைப்பு

‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியால் சங்கம்துறை பகுதியில் சாலை சீரமைப்பு

Update: 2023-08-31 20:31 GMT

ஈரோடு மாநகராட்சி சூரம்பட்டி அணைக்கட்டு அருகே சங்கம்துறை என்ற பகுதி உள்ளது. இங்கு ஏராளமான வீடுகள் உள்ளன. ஈரோடு மாநகராட்சியின் பழமையான குடியிருப்பு பகுதிகளில் இதுவும் ஒன்றாகும். ஆனால் இங்கு அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவித்து இருந்தனர்.

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பகுதியில் ரோடு போடப்படாமல் இருந்தது. தார் ரோடு மண் ரோடாக மாறிப்போனது. இதுகுறித்து கடந்த 28-ந் தேதி 'தினத்தந்தி' நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. அதைத்தொடர்ந்து ஈரோடு மாநகராட்சி அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்தனர். குறிப்பிட்ட பகுதியில் தார் போடப்பட்டு சாைல சீரமைக்கப் பட்டது. இதனால் அந்த பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, 'எங்கள் நீண்டகால கோரிக்கையை செய்தியாக வெளியிட்ட 'தினத்தந்தி'க்கும், உடனடி நடவடிக்கை எடுத்து ரோடு அமைத்து தந்த மாநகராட்சி மேயர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுக்கும் நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்' என்றார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்