தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டி, பொதுமக்கள் குறைகள் பற்றிய தொகுப்பு.

Update: 2022-06-17 18:43 GMT


மீண்டும் ஆக்கிரமிப்பு கடைகள்

வேலூர் அண்ணாசாலை ஓரத்தில் ஆக்கிரமித்து நிறுத்தப்படும் வாகனங்கள் மற்றும் பழக்கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் அப்புறப்படுத்தினர். ஆனால் மறுதினமே மீண்டும் கடைகள் சாலையோரத்தை ஆக்கிரமிக்க தொடங்கி விட்டன. இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-மோகன்பாபு, வேலூர்.

சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட ராஜவீதியில் சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்பு செய்து பலர் கடைகளை வைத்துள்ளனர். இதனால் அந்தப் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களும் தங்களின் வாகனங்களை சாலையிலேயே நிறுத்தி விட்டு செல்கின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல், விபத்துகள் ஏற்படுகிறது. சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பாலச்சந்திரன், செங்கம்.

 கால்வாய் தூர்வார வேண்டும்

வேலூர் தோட்டப்பாளையம் அரசினர் மாணவிகள் விடுதி அருகே கழிவுநீர் கால்வாய் உள்ளது. இந்தக் கால்வாயில் அளவுக்கு அதிகமாக பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகள் தேங்கி கிடக்கின்றன. இதனால் கழிவுநீர் செல்ல சிரமம் ஏற்படுகிறது. மேலும் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மாயவன், வேலூர்.

பழைய சாலையை அகற்றி விட்டு புதிதாக போட வேண்டும்

ராணிப்ேபட்டை மாவட்டம் ஓச்ேசரி கிராமம் பிள்ளையார் கோவில் தெருவில் சிமெண்டு சாலை அமைக்க உள்ளனர். மேலும் குடிநீர் குழாய் பதிக்க உள்ளனர். குடிநீர் குழாைய அமைத்த பிறகு புதிதாக சிமெண்டு சாலை போடும் பணியை மேற்கொள்ள வேண்டும். அத்துடன் ஏற்கனவே உள்ள பழைய சிமெண்டு சாலையை அகற்றி விட்டு புதிதாக சிமெண்டு சாலை அமைக்க ேவண்டும். பழைய சிமெண்டு சாலையை அகற்றாமல் அதன் மீது புதிதாக சாலை அமைத்தால் அந்தச் சாலையை மக்கள் நீண்டநாள் பயன்படுத்த முடியாது, விரைவிலேயே சேதமாகி விடும் என்பதை கலெக்டர், வட்டார வளர்ச்சி அலுவலர் கவனத்தில் கொள்ள வேண்டும்.

-வி.பி.ேக.திருேவங்கடசரவணன், ஓச்சேரி.

 பள்ளி முன்பு கொட்டப்படும் குப்பைகள்

வேலூர் சைதாப்பேட்டையில் உள்ள எடத்தெருவில் மாநகராட்சி நடுநிலைப் பள்ளி, அங்கன்வாடி ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட குழந்தைகள் மையம் ஆகியவை ஒரே வளாகத்தில் உள்ளன. இந்தப் பகுதியில் ஆங்காங்கே சேகரிக்கப்படும் குப்பைகளை, மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் பள்ளியின் முன்பு கொட்டி வைத்து பின்னர் அப்புறப்படுத்துகிறார்கள். இதனால் பள்ளி முன்பு சுகாதாரக் கேடாக உள்ளது. பள்ளி முன்பு குப்பைகளை கொட்டி வைக்காமல் அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-சிவக்குமார், வேலூர்.

நிறுத்தத்தில் நின்று பயணிகளை ஏற்றி இறக்க வேண்டும்

வேலூரில் இருந்து கண்ணமங்கலம் வழியாக ரெட்டிபாளையம், காளசமுத்திரம், மேல்நகர், புதுப்பாளையம், வாழியூர் ஆகிய கிராமங்களுக்கு அரசு டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் கண்ணமங்கலம் வழியாக திருவண்ணாமலை, வேலூருக்கு புறநகர் பஸ்கள் இயக்கப்படுகின்றன. பெரும்பாலான அரசு டவுன் பஸ்கள் நிறுத்தத்தில் நிற்காமல் சற்று தூரத்தில் நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்கி விடுகிறார்கள். அதை, தட்டி ேகட்கும் பயணிகளை டிரைவர், கண்டக்டர்கள் தகாத வார்த்தைகளால் பேசி திட்டுகிறார்கள். நிறுத்தத்தில் நின்று பயணிகளை ஏற்றி இறக்க போக்குவரத்துக்கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சத்தியசீலன், கண்ணமங்கலம்.

 குப்பை கொட்டப்படும் கால்வாய்

வேலூர் சைதாப்பேட்டையில் உள்ள கால்வாயில் பொதுமக்கள் குப்பைகளை கொட்டுகிறார்கள். இதனால் கால்வாய் முழுவதும் குப்பைகள் தேங்கி கிடக்கிறது. குப்பைகளை அகற்றவும், மீண்டும் குப்பைகளை கால்வாயில் கொட்டாமல் இருக்கவும் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-அப்துல்காதர், வேலூர்.

நடைமேடையில் சிமெண்டு சிலாப் போட வேண்டும்

வேலூர் சத்துவாச்சாரி சி.எம்.சி. காலனி 6-வது தெரு மெயின்ரோடு பகுதியில் மக்கள் நடந்து செல்ல நடைமேடை அமைத்தார்கள். ஆனால் அதன் மீது சரியாக சிமெண்டு சிலாப் போட்டு மூடவில்லை. அந்த வழியாக சென்று வர சிரமமாக உள்ளது. நடைபாதையில் சிமெண்டு சிலாப் மூடி போட வேண்டும்.

-குமார், வேலூர்.

கால்வாயை தூர்வார வேண்டும்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி-சேத்துப்பட்டு சாலையில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் பின் பக்கமுள்ள சக்திநகர் பகுதியில் கால்வாயில் கழிவுநீர் தேங்கி உள்ளது. கால்வாயை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க ேவண்டும்.

-ஆர்.யோகேஸ்வரன், ஆரணி.

 கால்வாய் வசதி தேவை

திருவண்ணாமலை மாவட்டம் சத்தியமூர்த்தி நகரில் ஏரளமான மக்கள் வசிக்கின்றனர். அங்கு மழை பெய்யும்போதெல்லாம் நகரில் மழைநீர் தேங்கி குளம்போல் காட்சி அளிக்கிறது. அந்த வழியாக நடந்ேதா, வாகனங்களிலோ செல்ல சிரமமாக உள்ளது. தேங்கி நிற்கும் மழைநீர் வடிய போதிய கல்வாய் வசதி இல்லை. தெருவில் முறையான சாலை வசதியும் இல்லை. எங்கள் நகரில் தேங்கும் மழைநீர் வடிய ேவண்டுமென்றால் கால்வாய் வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.

-ஏழுமலை, கலசபாக்கம்.

தாழ்வாக செல்லும் மின்கம்பியால் ஆபத்து

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த கிரிசமுத்திரம் புதுமனை தெருவில் குடியிருப்புகளுக்கு மேலே கைக்கு எட்டும் தூரத்தில் தாழ்வாக உயர் அழுத்த மின்கம்பிகள் செல்கின்றன. இதனால் எந்த நேரமும் ஆபத்து நடக்கலாம். எனவே மக்கள் நடமாட்டம் இல்லாத மின்வழிப்பாதையில் கம்பிகளை அமைக்க வேண்டும். இல்லையேல் சற்று உயரத்தில் மின்கம்பிகளை தூக்கி அமைக்க மின்வாரியத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க ேவண்டும்.

-பிரபா, கிரிசமுத்திரம்.

Tags:    

மேலும் செய்திகள்