தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டி

Update: 2022-10-23 18:45 GMT

மரம் வெட்டப்பட்டது

கீழ்குளம் சந்திப்பில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் தேங்காப்பட்டணம் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையின் குறுக்கே மாமரம் ஒன்று சாய்ந்த நிலையில் காணப்பட்டது. எப்போது வேண்டுமானாலும் மரம் முறிந்து விழுந்து அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் இருந்தது. இதுபற்றி தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையில் சாய்ந்த நிலையில் காணப்பட்ட மரத்தின் கிளைகளை வெட்டி அகற்றினர். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தியை வெளியிட்ட தினத்தந்திக்கும் அந்த பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

-அப்துல் ரசாக், இனயம்.

ஆபத்தான நிலையில் மின்கம்பம்

கீழப்பெருவிளையில் இருந்து கானம் லேட்டெக்ஸ் தொழிற்சாலை செல்லும் குறுக்குச்சாலையில் ஒரு மின்கம்பம் உள்ளது. இந்த மின்கம்பத்தின் அடிப்பகுதி துருப்பிடித்த நிலையில் காணப்படுகிறது. அத்துடன் மின்கம்பத்தைெயாட்டி ஒரு பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் விழும் சூழ்நிலையில் உள்ளது. எனவே ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஆ. ஆன்றணி சதீஷ், நாகர்கோவில்.

காத்திருக்கும் ஆபத்து

நாகர்கோவில் டிஸ்லரி ரோட்டில் சி.எஸ்.ஐ. ஆலயம் எதிரே உள்ள ஒரு மின்கம்பத்தில் தெருவிளக்குகளுக்கான சுவிட்ச் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பாக்ஸ் மிகவும் தாழ்வாக திறந்த நிலையில் உள்ளது. அந்த வழியாக செல்லும் சிறுவர்கள், பொதுமக்கள் சுவிட்ச் பாக்சை ெதாடும் பட்சத்தில் ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, சுவிட்ச் பாக்சை பாதுகாப்பான முறையில் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மா.சதீஷ்குமார், நாகர்கோவில்.

சீரமைக்க வேண்டிய சாலை

திக்கணங்கோடு ஊராட்சிக்குட்பட்ட ஆர்.சி. தெரு குருசடியில் இருந்து வட்டவிளை வாழவிளை செல்லும் சாலை மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் செல்கிறவர்களும், நடந்து செல்கிறவர்களும் மிகவும் அவதிப்படுகிறார்கள். எனவே சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜா, திக்கணங்கோடு.

மின்விளக்கு மாற்றப்படுமா?

நாகர்கோவில் சவேரியார் சந்திப்பில் இருந்து செட்டிகுளம் செல்லும் சாலையில் டி.வி.டி.காலனி உள்ளது. இந்த சாலையில் செந்தூரான்நகர் செல்லும் பிரிவு சாலையின் முகப்பு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஒரு மின்கம்பத்தில் விளக்கு பிடிமானம் இல்லாமல் அந்தரத்தில் தொங்கியபடி காணப்படுகிறது. மேலும், அந்த விளக்கில் இருந்து குறைவான வெளிச்சமே கிடைப்பதால் இரவு நேரம் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, வாகன ஓட்டிகள் பொதுமகக்ள் நலன் கருதி அந்த மின்கம்பத்தில் உள்ள விளக்கை அகற்றி விட்டு புதிய மின்விளக்கை பொருத்திட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராசிக், டி.வி.டி.காலனி, நாகர்கோவில்.

சீரமைக்கப்படுமா?

கன்னியாகுமரி- நாகர்கோவில் நெடுஞ்சாலையில் பொற்றையடி பகுதியில் இருந்து ஆண்டிவிளை ஜங்ஷன் வழியாக கோவில் விளைக்கு சாலை செல்கிறது. இந்த சாலை ஆண்டி விளையில் இருந்து கோவில் விளை வரை சேதம் அடைந்து உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சி.ராம்தாஸ், கன்னியாகுமரி.

Tags:    

மேலும் செய்திகள்