'தினத்தந்தி' புகார் பெட்டி

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகளை பார்க்கலாம்.

Update: 2022-10-01 17:31 GMT

ரேஷன் கடை பயன்பாட்டுக்கு வருமா?


கம்பம் அருகே அண்ணாபுரத்தில் புதிதாக கட்டப்பட்ட ரேஷன் கடை இதுவரை பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படவில்லை. இதனால் பொதுமக்கள் ரேஷன் பொருட்கள் வாங்க முடியாமல் தவித்து வருகின்றனர். எனவே ரேஷன் கடை கட்டிடத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?


-கவிதா, அண்ணாபுரம்.


இருள் சூழ்ந்து காணப்படும் காத்திருப்பு அறை 


கம்பம் பஸ் நிலையத்தில் பயணிகள் காத்திருக்கும் அறையில் மின்விளக்குகள் எரியாமல் உள்ளன. இதன் காரணமாக இரவு நேரத்தில் அந்த அறை இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் சமூக விரோத செயல்களும் அங்கு அடிக்கடி நடக்கிறது. எனவே மின்விளக்குகளை எரிய வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


-பிரபாகரன், கம்பம்.


ஓடைப்பாதை ஆக்கிரமிப்பு


கம்பம் உத்தமபுரத்தில் கோசந்திர ஓடை பாதை ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியுள்ளது. இதனால் அப்பகுதி விவசாயிகள் பாதிப்படைந்து வருகின்றனர். எனவே ஓடைப்பாதை ஆக்கிரமிப்பை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


-அழகுராஜா, கம்பம்.


சாலையோரத்தில் குவியும் குப்பைகள்


தேனியை அடுத்த ஆண்டிப்பட்டி மரிக்குண்டுவில் அண்ணாநகர் காலனி சாலையோரத்தில் குப்பைகள் குவிக்கப்படுகின்றன. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரக்கேடும் ஏற்படுகிறது. மேலும் பொதுமக்களுக்கும் நோய்த்தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே குப்பைகள் கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


-கண்ணன், மரிக்குண்டு.


காட்சிப்பொருளான குடிநீர் தொட்டி


திண்டுக்கல் மெண்டோன்சா காலனியில் அமைந்துள்ள தண்ணீர் தொட்டியில் குடிநீர் நிரப்புவதற்காக பொருத்தப்பட்ட மின்மோட்டார் சரியாக தண்ணீர் உறிஞ்சாததால் தொட்டி பயன்பாடு இல்லாமல் காட்சிப்பொருளாக உள்ளது. இதனால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே குடிநீர் தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.


-தெருவாசிகள், திண்டுக்கல்.


தெருவிளக்கு வசதி வேண்டும்


திண்டுக்கல்-சிலுவத்தூர் சாலையில் ஏர்போர்ட் நகரில் இருந்து வன்னியபாறைப்பட்டி செல்லும் வழியில் தெரு விளக்கு வசதி செய்யப்படவில்லை. இதனால் இரவு நேரத்தில் அப்பகுதி முழுவதும் இருள் சூழ்ந்த நிலையில் காணப்படுகிறது. மேலும் இரவில் மோட்டார் சைக்கிள்களில் அந்த வழியாக செல்பவர்கள் விபத்தில் சிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. எனவே தெருவிளக்கு வசதியை ஏற்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


-செந்தில், வன்னியபாறைப்பட்டி


தீ வைத்து எரிக்கப்படும் குப்பைகள்


திண்டுக்கல் ரவுண்டு ரோடு பகுதியில் வீடுகளில் சேகரமாகும் குப்பைகள் சாலையோரத்தில் கொட்டி தீ வைத்து எரிக்கப்படுகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மூட்டமாக காணப்படுகிறது. இதனால் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே குப்பைகளை தீ வைத்து எரிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.


-முருகன், ரவுண்ட் ரோடுபுதூர்.


வேகத்தடை அமைக்க வேண்டும்


பழனி திருவள்ளுவர் சாலையில் நால்ரோடு சந்திப்பு பகுதியில் வேகத்தடை அமைக்கப்படவில்லை. இதனால் அந்த வழியாக வரும் வாகனங்கள் அதிவேகமாக செல்வதால் அடிக்கடி விபத்தில் சிக்கும் சம்பவங்கள் நடக்கிறது. எனவே நால்ரோடு சந்திப்பு பகுதியில் வேகத்தடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


-கார்த்திகேயன், பழனி.


கனரக வாகனங்களால் போக்குவரத்து நெரிசல்


பழனி காந்தி மார்க்கெட் பகுதியில் பகல் நேரத்தில் கனரக வாகனங்கள் பொருட்களை இறக்குவதற்காக வந்து செல்கின்றன. இதனால் மார்க்கெட் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பொதுமக்களும் அவதிப்படுகின்றனர். எனவே பகலில் மார்க்கெட் பகுதிக்குள் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


-அன்புச்செல்வன், பழனி.


------------------


உங்கள் புகார்களை இணையதளம் மூலமாகவும் https://pukaarpetti.dailythanthi.com என்ற முகவரியில் பதிவு செய்யலாம்.


Tags:    

மேலும் செய்திகள்