தினந்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு வாசகர்கள் அனுப்பிய புகார்கள் விவரம்

Update: 2022-06-19 20:50 GMT

சீரமைக்கப்பட்டது

பூதப்பாண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகள் வழியாக நாகர்கோவில் மாநகராட்சிக்கு முக்கடல் அணையில் இருந்து குடிநீர் கொண்டுவரப்படுகிறது. இதற்காக சாலையில் பதிக்கப்பட்ட ராட்சத குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் சாலையில் பாய்ந்து வீணானது. இதுபற்றி தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்ைக எடுத்து குழாய் உடைப்பை சீரமைத்தனர். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும் அந்த பகுதி மக்கள் நன்றியை தெரிவித்தனர்.

சுகாதார சீர்கேடு

சுசீந்திரம் பேரூராட்சிக்குட்பட்ட கற்காடுக்கு செல்லும் சாலையில் சிவா நகர் உள்ளது. இந்த பகுதியில் உள்ள கழிவுநீர் ஓடையை முறையாக தூர்வாரி பராமரிக்காததால் குப்பைகள் தேங்கி காணப்படுகிறது. இதனால், அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே, கழிவுநீர் ஓடையை தூர்வார சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஆர்.முரளி, கொத்தையார் திட்டத்தெரு, சுசீந்திரம்.

நடவடிக்கை எடுப்பார்களா?

நாகர்கோவிலில் இருந்து ஈத்தாமொழிக்கு செல்லும் நெடுஞ்சாலையில் வத்தக்காவிளை உள்ளது. இந்த பகுதியில் உள்ள பாலம் பழுதடைந்து காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அச்சத்துடனேயே செல்கின்றனர். எனவே, பலத்தை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-என்.சிவபிரசாந்த் வத்தக்காவிளை.

முறையாக சீரமைக்க வேண்டும்

புன்னை நகரில் இருந்து ஏ.ஆா்.கேம்ப் செல்லும் சாலைஉள்ளது. இந்த சாலையில் உள்ள ஒரு பள்ளியின் அருகில் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளம் சீரமைக்கப்பட்டது. ஆனால், முறையாக சீரமைக்காததால் மீண்டும் அதே இடத்தில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருவதுடன் விபத்தில் சிக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே, பள்ளத்தை முறையாக சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஆ.ஆன்டணி சதீஷ், கீழ ஆசாரிபள்ளம்.

வாகன ஓட்டிகள் அவதி

நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட இளங்கடையில் பட்டாரியர் நெடுந்தெரு உள்ளது. இந்த தெருவில் புதிதாக சாலை போடுவதற்காக ஜல்லிகள் நிரப்பட்டது. ஆனால், கடந்த 2 மாதங்களாக சாலை பணி நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பள்ளி மாணவ-மாணவிகள், முதியோர்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அடிக்கடி விபத்திலும் சிக்கி வருகின்றனர். எனவே, பணியை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சங்கர், இளங்கடை.


விபத்து அபாயம்

நாகர்கோவில் நாகராஜா கோவில் செல்லும் சாலையில் தலைமை தபால் நிலையம் உள்ளது. விடுமுறை நாட்களை தவிர மற்ற நாட்களில் எப்போது பரபரப்பாக காணப்படும் இந்த தபால்நிலையத்தின் முன்பகுதியில் உள் கழிவுநீர் ஓடையின் சிமெண்டு சிலாப்பு சேதமடைந்து காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் விபத்தில் சிக்கி உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சேதமடைந்த சிமெண்டு சிலாப்பை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-காசி, வடிவீஸ்வரம். 

Tags:    

மேலும் செய்திகள்