'தினத்தந்தி' புகார் பெட்டி

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகளை பார்க்கலாம்.

Update: 2022-06-19 16:32 GMT

அகற்றப்படாத குப்பைகள்

பழனியை அடுத்த சிவகிரிப்பட்டி ஊராட்சி பகுதியில் சாலையோரத்தில் குப்பைகள் கொட்டப்படுகின்றன. மேலும் அவை முறையாக அகற்றப்படுவதும் இல்லை. இதனால் அப்பகுதி முழுவதும் குப்பை கூளமாக காட்சியளிப்பதுடன் சுகாதாரக்கேடும் ஏற்படுகிறது. எனவே குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-குமரேசன், பழனி.

கால்வாயில் தேங்கும் கழிவுநீர்

திண்டுக்கல் 15-வது வார்டு மேட்டுராஜக்காபட்டி பகுதியில் உள்ள சாக்கடை கால்வாய் முறையாக தூர்வாரப்படுவதில்லை. இதனால் கழிவுநீர் கால்வாயிலேயே தேங்கி நிற்பதால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. கால்வாயை தூர்வார சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-சுப்பிரமணி, திண்டுக்கல்.

போக்குவரத்து நெரிசல் 

திண்டுக்கல் எம்.வி.எம். அரசு மகளிர் கல்லூரி அருகே மேம்பாலத்தையொட்டி சாலையை ஆக்கிரமித்து கனரக வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். மேலும் காலை, மாலை நேரத்தில் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. எனவே சாலையை ஆக்கிரமித்து வாகனங்களை நிறுத்துபவர்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராமலிங்கம், திண்டுக்கல்.

குவிந்து கிடக்கும் குப்பைகள்

தேனி அல்லிநகரம் பெரியார்நகரில் கொட்டப்படும் குப்பைகள் அள்ளப்படுவதில்லை. இதனால் குப்பை தொட்டி நிரம்பி வழியும் அளவுக்கு அங்கு குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் பொதுமக்களுக்கு நோய்த்தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஈஷா, பெரியார்நகர்.

Tags:    

மேலும் செய்திகள்