'தினத்தந்தி' புகார் பெட்டி

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-06-14 15:31 GMT

கழிவுநீர் தேங்குவதால் சுகாதாரக்கேடு

திண்டுக்கல் அரசு மருத்துவமனை வளாகத்தில் காசநோய் பிரிவு உள்ளது. இங்கு ஏராளமானோர் சிகிச்சைக்காக வருகின்றனர். இந்த நிலையில் காசநோய் பிரிவு நுழைவு வாயில் அருகே சாலையில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் நோயாளிகள் அவதிப்படுவதுடன் சுகாதாரக்கேடும் ஏற்பட்டுள்ளது. எனவே கழிவுநீர் தேங்காமல் இருக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கண்ணன், திண்டுக்கல்.

பயணிகள் நிழற்குடை வேண்டும்

கோபால்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே உள்ள பஸ் நிறுத்தம் பகுதியில் பயணிகள் நிழற்குடை அமைக்கவில்லை. இதனால் கொளுத்தும் வெயிலில் பொதுமக்கள் பஸ்சுக்காக காத்திருக்கும் அவல நிலை உள்ளது. எனவே பயணிகள் நிழற்குடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-செந்தில், கோபால்பட்டி.

ஆதார் அட்டை எடுக்கும் பணி நிறுத்தம்

தேனி கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகங்களில் ஆதார் பதிவு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு 5 வயதுக்கு உட்பட்ட சிறுவர், சிறுமிகளுக்கு ஆதார் அட்டை எடுக்கும் பணிகள் தொழில்நுட்ப கோளாறு காரணமாக கடந்த ஒரு வாரமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே பிரச்சினையை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-வினோத், தேனி.

சாக்கடை கால்வாய் தூர்வாரப்படுமா?

பழனியை அடுத்த மானூரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு அருகில் உள்ள சாக்கடை கால்வாய் தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் கழிவுநீர் தேங்கி நிற்பதுடன் கொசுத்தொல்லையும் அதிகரித்துள்ளது. எனவே சாக்கடை கால்வாயை தூர்வார சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-குமார், மானூர்.

Tags:    

மேலும் செய்திகள்