பொதுமக்கள் குறைகளை தொிவிக்கும் தினத்தந்தி புகாா்பெட்டி

தினத்தந்தி புகாா்பெட்டி

Update: 2022-06-16 17:39 GMT


முட்புதர்கள் அகற்றப்படுமா?

ஆப்பக்கூடல் புதுப்பாளையத்தில் உள்ள ஆப்பக்கூடல் பேரூராட்சி அலுவலகம் அருகில் மின்கம்பத்தில் தெருவிளக்கு பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் அதை சுற்றி ெசடி, கொடிகள், முட்புதர்கள் வளர்ந்து காணப்படுகிறது. இதனால் அவற்றின் மீது விளக்கின் வெளிச்சம் படுவதால் இருளாக உள்ளது. எனவே பொதுமக்கள் நலன் கருதி தெருவிளக்கை சுற்றி வளர்ந்து உள்ள முட்புதர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரவீந்திரன், புதுப்பாளையம்.

மின்விளக்கு பொருத்த வேண்டும்

பங்களாப்புதூா் அருகே புஞ்சைத்துறையம்பாளையம் கிறிஸ்தவ ஆலயம் பகுதியில் மின்விளக்கு பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் இது சாியாக ஒளிா்வதில்லை. உடனே வேறு மின்விளக்கு பொருத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், புஞ்சைத்துறையம்பாளையம்.

குவிந்து கிடக்கும் குப்பை

கோபி பஸ் நிலையம் அருகே செல்லும் கீரிப்பள்ளம் ஓடையின் இருபுறமும் குப்பைகள் அதிகமாக குவிந்து கிடக்கிறது. இதனால் துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும் ஓடையில் தண்ணீர் செல்வதற்கு குப்பைகளால் தடை ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து குப்பைகளை அகற்றி ஓடையில் தண்ணீர் தங்கு தடையின்றி செல்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாதன், கோபி.

சரியான நேரத்தில் பஸ் வருமா?

அந்தியூரை அடுத்த அத்தாணி காலனியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு செம்புளிச்சாம்பாளையம் பகுதியை சேர்ந்த மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். பவானியில் இருந்து அத்தாணிக்கு அரசு பஸ் இயக்கப்பட்டு் வருகிறது. இந்த பஸ் மாலை நேரத்தில் பள்ளிக்கூடம் முடிவதற்கு முன்பு வந்து செல்கிறது. இதனால் செம்புளிச்சாம்பாளையம் பகுதி மாணவ-மாணவிகள் பள்ளிக்கூடம் முடிந்து ஊர்களுக்கு சென்று சேர முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே பள்ளிக்கூட நேரத்தில் அரசு பஸ்சை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குமார், அத்தாணி காலனி.

பாராட்டு

கோபி கோடீஸ்வரர் நகர் வீதியில் உள்ள ஆழ்துளை கிணற்றுக்கு ரப்பர் பலகை போட்டு மூடப்பட்டிருந்தது. இது நீளமாக இருந்ததால் இரவு நேரங்களில் விபத்து ஏற்பட வாய்ப்பு இருந்தது. இதுபற்றிய செய்தி தினத்தந்தி புகார் பெட்டி பகுதியில் வெளியாகி இருந்தது. இதைத்தொடர்ந்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். தற்போது ஆழ்துளை கிணறு சரியாக மூடப்பட்டுள்ளது. எனவே செய்தி வெளியிட்டு உதவிய தினத்தந்தி நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் ெபாதுமக்கள் சார்பில் நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

பொதுமக்கள், கோபி.

Tags:    

மேலும் செய்திகள்