தினத்தந்தி செய்தி எதிரொலி; குன்றி மலைக்கிராம மக்களுக்கு குடிநீர் வசதி

தினத்தந்தி செய்தி எதிரொலி; குன்றி மலைக்கிராம மக்களுக்கு குடிநீர் வசதி

Update: 2023-03-15 20:44 GMT

சத்தியமங்கலம்

சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட குன்றி ஊராட்சியில் ஆனந்த நகர், இந்திராநகர், பெரிய குன்றி ஆகிய பகுதிகள் உள்ளது. இங்குள்ள மக்கள் குடிநீர் தேவைக்காக காட்டுக்குள் சென்று அங்குள்ள குளங்களில் தண்ணீர் எடுத்து குடங்களில் சுமந்து கொண்டு வருகிறார்கள். இதற்காக தினமும் 4 கி.மீ. தூரம் நடந்து சென்று வரும் நிலை உள்ளது. இதனால் பெண்கள் போதிய தண்ணீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வந்தார்கள், இது தொடர்பாக தினத்தந்தியில் செய்தி வெளிவந்தது.

இதுபற்றி அறிந்த சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய தலைவர் கே.சி.பி.இளங்கோ வட்டார வளர்ச்சி அலுவலர் பிரேம்குமார், உதவி பொறியாளர் வெள்ளிங்கிரி ஆகியோருடன் நேற்று பகல் 11 மணிக்கு பாதிக்கப்பட்ட பகுதிக்கு சென்று அங்குள்ள மக்களை சந்தித்து குடிநீர் பிரச்சினை குறித்து கேட்டறிந்தார். அப்போது அவர்கள் கூறும்போது, 'எங்களுக்கு குடிநீர் வசதி கிடைப்பதில்லை. இதுவரை இருந்த குடிநீர் குழாய்கள் உடைந்து சேதம் ஆகிவிட்டதால் இந்த பகுதிக்கு குடிநீர் வினியோகம் கிடைக்கவில்லை. எனவே உடனடியாக குடிநீர் குழாய்கள் புதிதாக அமைத்து தர வேண்டும்' என்றனர்.

அதற்கு அவர், தன்னுடைய ஊராட்சி ஒன்றிய பொது நிதியில் இருந்து ரூ.2 லட்சத்து 65 ஆயிரம் வழங்கி பணியை தொடங்க உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து பணிகள் தொடங்கப்பட்டு வேகமாக நடைபெற்று வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்