தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-06-05 20:19 GMT

சுகாதார சீா்கேடு

மதுைர மாவட்டம் தனக்கன்குளம் ஊராட்சியில் கழிவுநீர் கால்வாய்கள் தூர்வாரப்படவில்லை. இதனால் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. தேங்கிய கழிவுநீரிலிருந்து துர்நாற்றம் வீசுவதுடன் கொசுக்கள் உருவாகி நோய்கள் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த பகுதியில் குப்ைப தொட்டிகள் இல்லாத காரணத்தால் குப்பைகள் சாலைகளில் கொட்டப்படுவதால் சுகாதார சீர்கேடாக உள்ளது. எனவே இந்த பகுதியில் குப்பைதொட்டிகள் அமைத்து கழிவுநீர் கால்வாயினை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மூர்த்தி, மதுரை.

பொதுமக்கள் அவதி

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி வட்டம் சேரந்தை கிராமத்தில் உவரிநீரை குடிநீராக மாற்றும் சுத்திகரிப்பு நிலையம் உள்ளது. இந்த சுத்திகரிப்பு நிலையம் சில நாட்களாக செயல்படாத காரணத்தால் சேரந்தை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மக்களும் குடிநீர் சரிவர கிடைக்காமல் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி இந்த சுத்திகரிப்பு நிலையத்தை பழுதுபார்த்து மீண்டும் மக்கள் பயன்பெற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சண்முகவேல், சேரந்தை கிராமம்.

நிழற்குடை சீரமைக்கப்படுமா?

மதுரை மாவட்டம் வரிச்சியூர் வைத்தியநாதபுரம் பகுதியில் உள்ள பயணிகள் நிழற்குடையின் மேற்கூரை சிதிலமடைந்து சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் இங்கு பஸ் ஏறுவதற்காக வரும் பொதுமக்கள் நிழற்குடையின் உள்ளே செல்ல அச்சப்படுகின்றனர். எனவே விபரீதம் எதுவும் நிகழ்வதற்குள் இந்த நிழற்குடையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

செல்வக்குமார், வரிச்சியூர்.

சாலையோர தடுப்புகள் வேண்டும்

விருதுநகர் மாவட்டம் கல்குறிச்சி ஊராட்சியில் பூங்காவனதம்மன் கோவில் மற்றும் அய்யனார் கோவில் செல்லும் பாதையின் குறிப்பிட்ட வளைவில் தடுப்புகள் இன்றி ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் சாைலயின் வளைவு தெரியாமல் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே அசம்பாவிதங்கள் நடைபெறும் முன்பு இந்த பாதையில் சாலையோர தடுப்புகள் அமைத்திட வேண்டும்.

பாலா, காரியாபட்டி.

ெகாசுக்கள் தொல்லை

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியில் நாளுக்கு நாள் கொசுக்களின் தொல்லை அதிகமாக உள்ளது. கொசுக்கடியால் இப்பகுதி மக்கள் தூக்கமின்றி அவதிப்படும் நிலை உள்ளது. மேலும் கொசுக்களால் டெங்கு, மலேரியா போன்ற நோய்களும் பரவும் வாய்ப்பு உள்ளது. எனவே இப்பகுதியில் கொசுமருந்து அடித்து கொசுக்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பார்களா?

கார்த்திக், பரமக்குடி.

சேதமடைந்த நீர்தேக்க தொட்டி

விருதுநகா் மாவட்டம் சிவகாசி தாலுகா மேல ஆமத்தூர் ஊராட்சியில் உள்ள மேல்நிலைநீா்தேக்க ெதாட்டி சேதமடைந்துவிட்டதால் கடந்த சில நாட்களாக குடிநீா் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர். எனவே இந்த பகுதியில் புதிய நீா்தேக்க தொட்டி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பரத்ராஜா, சிவகாசி.

பராமரிப்பு இல்லாத சந்தை

ராமநாதபுரம் மாவட்டம் புதிய பஸ் நிலையம் அருகில் உழவர் சந்தை உள்ளது. இந்த உழவர் சந்தைக்கு விவசாயிகளின் வருகையின்மை காரணமாக கடைகள் உபயோகமின்றி காட்சி பொருளாக இருந்து வருகிறது. மேலும் போதிய பராமரிப்பு இல்லாத காரணத்தால் கட்டுமானம் பல இடங்களில் சேதமாகியுள்ளது. இதனை சரிசெய்து விவசாயிகள் அன்றாடம் பயன்படுத்தும் வகையில் கொண்டுவர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அன்வர்தீன், ராமநாதபுரம்.

விபத்து ஏற்படும் அபாயம்

மதுரை வைகை ஆற்றின் வடகரை ஓரம் விரிவாக்கம் செய்யப்பட்ட சாலையில் ராமராயர் மண்டபத்தில் இருந்து ஓபுளாபடித்துறை பாலம் வரை மின்விளக்குகள் இல்லை. இதனால் இந்த சாலையில் அடிக்கடி சிறு, சிறு விபத்துகள் ஏற்படுகிறது. எனவே இந்த சாலையில் மின்விளக்குகள் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மணி, மதுரை.

படிக்கட்டுகள் அமைக்கப்படுமா?

ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் பஸ் நிலையம் அருகே புகழ்ஊருணி உள்ளது. இந்த ஊருணிநீரை மக்கள் பயன்படுத்தி வீட்டு தேவைக்காக பயன்படுத்தி வருகின்றனா். இந்நிலையில் இந்த ஊருணியில் இறங்க படிக்கட்டுகள் கிடையாது. இதனால் பொதுமக்கள் இந்த ஊருணி நீரை எடுக்க சிரமப்படுகிறார்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த ஊருணியில் இறங்கும் பயன்படுத்தும் அளவிற்கு படிக்கட்டுகள் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உசேன், பனைக்குளம்.

தொல்லை தரும் நாய்கள்

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள மறவன்குளம் கிராமத்தில் தெரு நாய்களின் தொல்லை அதிகமாக உள்ளது. இந்த நாய்கள் சாலையில் செல்பவர்களை கடித்து அச்சுறுத்துவதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சாலையில் செல்ல அச்சப்படுகின்றனர். வாகனங்களின் மீது நாய்கள் மோதுவதால் சிறு,சிறு விபத்துகளும் ஏற்படுகின்றது. பொதுமக்களுக்கு தொல்லை தரும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வரதராஜன், திருமங்கலம். 

Tags:    

மேலும் செய்திகள்