தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-;
மின்கம்பத்தை மாற்ற கோரிக்கை
அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஒன்றியம், அரங்கோட்டை மடத்து தெரு 8-வது வார்டு சாலையின் நடுப்பகுதியில் மின்விளக்கு உள்ளது. இதனால் அந்த வழியாக வாகனங்களில் செல்வோர் கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். மேலும் பொதுமக்கள் நடந்து செல்லவே சிரமமாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த மின்கம்பத்தை மாற்றி வேறு இடத்தில் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
பொதுமக்கள், அரங்கோட்டை
கால்நடைகளால் வாகன ஓட்டிகள் அவதி
அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி கடைவீதியில் சென்னை -கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் கால்நடைகள் சாலைகளில் மாலை நேரத்தில் படுத்து கொள்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி கொள்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
ராஜா, மீன்சுருட்டி.
போக்குவரத்து நெரிசல்
அரியலூர் மார்க்கெட் கடைவீதி பகுதிக்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இந்தநிலையில் மார்க்கெட் பகுதியில் உள்ள கடைக்காரர்கள் தங்கள் கடைகளின் முன்பு ஏராளமான பொருட்களை வைத்து ஆக்கிரமித்து செய்துள்ளனர். மேலும் கடைகளின் முன்பு ஆங்காங்கே ஏராளமான சைக்கிள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் சாலையை மறைத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் மார்க்கெட் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிேறாம்.
பொதுமக்கள், அரியலூர்.
குரங்குகள் தொல்லை
அரியலூர் நகர பகுதிகளில் ஏராளமான குரங்குகள் சுற்றித்திரிகின்றன. இவை பகுதிகளில் உள்ள வீடுகளில் புகுந்து வீட்டில் உள்ள மளிகை பொருட்கள், தின்பண்டங்கள் உள்ளிட்டவைகளை எடுத்துச்செல்வதுடன் குழந்தைகளை கடிக்க வருகிறது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அச்சத்தில் உள்ளனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட வனத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பிரபாகரன், அரியலூர்.
அரியலூர்
சாலையோர கடைகளால் விபத்து ஏற்படும் அபாயம்
அரியலூர் மாவட்டம், கழுவந்தோண்டி கும்பகோணம்-ஜெயங்கொண்டம் செல்லும் சாலையில் புதிதாக மேம்பாலம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. அந்த மேம்பாலத்தின் கீழ்பகுதியில் ஏராளமான சாலையோர கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் அனைத்தும் சாலையோரங்களில் நிறுத்தி அந்த கடைகளில் பொருட்களை வாங்கி செல்கின்றனர். இதனால் அந்த பகுதியில் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அதனை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், அரியலூர்