தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2023-03-12 18:30 GMT

ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா செட்டிக்குளம் கிராமத்தில் உள்ள பஸ் நிலைத்தில் இருந்து ஆலத்தூர் கேட் செல்லும் சாலை, பெரம்பலூர் மற்றும் திருச்சி செல்லும் சாலைகளில் இருப்புறமும் சிலர் ஆக்கிரமிப்பு செய்து கடைகளை வைத்துள்ளனர். இதனால் சாலையில் வாகனங்கள் சென்று வர முடியவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் கேட்டு கொள்கிறோம்.

மணிகண்டபிரபு, செட்டிக்குளம்.


தேங்கி நிற்கும் கழிவுநீர்

பெரம்பலூர் மாவட்டம், எறையூர் கிராமத்தில் 6-வது வார்டில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு சரியான சாக்கடை வசதி இல்லாததால் ஆங்காங்கே கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் ஆங்காங்கே குப்பைகளும் குவிந்து கிடக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

ரமேஷ், எறையூர்.

ஷேர் ஆட்டோக்களை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும்

பெரம்பலூர் நகர்ப்பகுதியில் ஷேர் ஆட்டோக்கள் அதிகமாக இயங்குகின்றன. ஆனால் ஷேர் ஆட்டோக்கள் நிறுத்தம் இல்லாத பகுதிகளிலும் பயணிகளை ஏற்றி, இறக்கி செல்கின்றனர். இதனால் அதன் பின்னால் வரும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகின்றனர். எனவே போக்குவரத்து போலீசார் ஷேர் ஆட்டோக்களை கட்டுக்குள் கொண்டு வந்து நிறுத்தங்களில் மட்டும் நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்கி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.

பொதுமக்கள், பெரம்பலூர்.

ஏரியை ஆக்கிரமித்துள்ள சீமை கருவேலமரங்கள்

பெரம்பலூர் மாவட்டம், கீழஉசேன்நகரம் கிராமத்தில் நாயகி அம்மன் ஏரி உள்ளது. இந்த ஏரி பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி கிடப்பதால் சீமைகருவேல மரங்கள் முளைத்து ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏரிக்கு தண்ணீர் வர வழியில்லாமல் வரண்டு கிடக்கிறது. இதனால் இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்தும், குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. எனேவ சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஏரியை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மணிவேல் , கீழஉசேன் நகரம்.

மது விற்பனையை தடுக்க வேண்டும்

பெரம்பலூர் மாவட்டம், கூடலூர் பகுதியில் 24 மணி நேரமும் மது விற்பனை நடைபெற்று வருகிறது. மேலும் மதுபிரியர்கள் குடித்து விட்டு பாட்டில்களை சாலையில் உடைத்து சென்று விடுகின்றனர். மேலும் மது விற்பனையால் இரவு நேரங்களில் சமூக விரோத செயல்களும் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், கூடலூர். 

Tags:    

மேலும் செய்திகள்