தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2023-01-18 18:36 GMT

அடிப்படை வசதிகள் செய்து தரப்படுமா? 

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஒன்றியம், மெய்யக்கவுண்டன்பட்டியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் கடந்த 5 ஆண்டுகளாக குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. இதனால் அப்பகுதி பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இதுகுறித்து பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், மெய்யக்கவுண்டன்பட்டி.

சுவரொட்டியை அகற்ற கோரிக்கை 

புதுக்கோட்டை மாவட்டம், காலாடிபட்டி சத்திரத்தில் இருந்து முக்கண்ணாமலைப்பட்டி செல்லும் சாலையோரத்தில் குடிநீர் தொட்டி ஒன்று உள்ளது. இதில் அரசியல் கட்சியினர் பலர் சுவரொட்டிகளை ஓட்டி உள்ளனர். இதனால் குடிநீர் விளம்பர பாதாகையாக மாறி உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சுவரொட்டியை அப்புறப்படுத்தி, இதனை ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், முக்கண்ணாமலைப்பட்டி.

பஸ் வசதி வேண்டும்

புதுக்கோட்டை மாவட்டம், காரக்கோட்டையில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில் ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இதில் பல மாணவ-மாணவிகள் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து தினமும் சைக்கிளில் வந்து செல்கின்றனர். எனவே மணமேல்குடியில் இருந்து காரக்கோட்டை வழியாக பஸ் இயக்க சம்பந்தப்பட்ட போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், காரக்கோட்டை.

தெருநாய்கள் தொல்லை 

புதுக்கோட்டை பஸ் நிலைப்பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. அவை சாலையில் செல்வோரை துரத்தி கடித்து வருகின்றன. இதனால் பொதுமக்கள் அச்சத்துடன் சாலையில் நடமாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், புதுக்கோட்டை.

அரசு கோழி பண்ணை மீண்டும் செயல்படுமா? 

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளத்தில் கடந்த பல ஆண்டுகளுக்கு செயல்பட்டு வந்தது. தற்போது கோழிப்பண்ணை புதர்மண்டி கிடக்கிறது. இதனால் அங்கு சமூக விரோத செயல்கள் அதிகமாக நடந்து வருகிறது. எனவே அந்த கோழிப்பண்ணையை மீண்டும் செயல்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், திருவரங்குளம்.  

Tags:    

மேலும் செய்திகள்