தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-11-16 18:47 GMT

வாய்க்காலை தூர்வார வேண்டும்

திருச்சி மாவட்டம், அல்லித்துறை பஞ்சாயத்துக்கு உட்பட்ட கீழசவேரியார்புரத்தில் விவசாயத்திற்காக பாசன மற்றும் வடிகால் வாய்க்கால் உள்ளது. இந்த நிலையில் இந்த வாய்க்கால் தூர்வாரப்படாமல் உள்ளதால் செடி-கொடிகள், கருவேல மரங்கள் உள்ளிட்டவை முளைத்து தண்ணீர் செல்ல பெரிதும் தடையாக உள்ளது. இதனால் மழைநீர் செல்ல வழியின்றி அருகில் உள்ள வயல் பகுதியிலும், குடியிருப்பு பகுதிகளிலும் மழைநீர் புகுந்து விடுகிறது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பெரியசாமி, அல்லித்துறை

மழைநீர் சூழ்ந்துள்ள சாலை

திருச்சி கே.கே. நகர் பஸ் நிலையத்திலிருந்து கிழக்கு திசை நோக்கி நாகப்பாநகர் செல்லும் சுமார் 400 மீட்டர் நீளமுள்ள தார்ச்சாலையானது மழை நீரால் சூழப்பட்டு, இப்பகுதியில் குடியிருக்கும் பொதுமக்கள் சாலையில் பயணிக்க முடியாத சூழலில் உள்ளது. அவசரத் தேவைக்கு 108 ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாத நிலையில் உள்ள இச்சாலையில், தனியார் பள்ளிக்கூடத்திற்கு செல்லும் பள்ளி வாகனங்கள், இரு சக்கர வாகன ஓட்டிகள் செல்லும் போது வாகனங்கள் பழுதடைவதுடன், பள்ளிக்குழந்தைகளை அழைத்து வரும் பெற்றோர்கள், சாலையில் உள்ள பள்ளங்கள் தெரியாமல் கீழே விழுந்து செல்கின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், நாகப்பா நகர்

தெருநாய்கள் தொல்லை

திருச்சி அரசு மருத்துவமனைக்கு தினமும் ஏராளமான நோயாளிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் இந்த மருத்துவமனை வளாகத்தில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. இவை ஒரு சில நேரங்களில் ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டுக்கொள்வதினால், நோயாளிகள் பெரிதும் அச்சத்துடன் வந்து செல்கின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

கார்க்கி, திருச்சி.

தூர்வாரப்படாத குட்டை

திருச்சி மாவட்டம், முசிறி தொகுதிக்கு உட்பட்ட கொளக்குடியில் இருந்து தும்பலம் செல்லும் சாலையோரத்தில் உள்ள ஒரு குட்டையில், அப்பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதுடன் மழைநீரை சேகரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து, குட்டையில் உள்ள குப்பைகளையும், சீமைக்கருவேல மரங்களையும் அகற்றி மழைநீரை சேகரித்து நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மதார்ஷா, திருச்சி

சுகாதாரமற்ற குடிநீர் வினியோகம்

திருச்சி மாவட்டம், முசிறி பகுதியில் அழகாபட்டி ரோடு சிலோன் காலனி மற்றும் காலனி அருகில் உள்ள வீடுகளில் வினியோகிக்கப்படும் குடிநீர் கலங்கலாக சுகாதாரமற்ற நிலையில் வினியோகம் செய்யப்படுகிறது. இதனால் இப்பகுதி மக்களுக்கு நோய் தொற்று ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட குடிநீர் தொட்டியை சுத்தம் செய்து பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், அழகாபட்டி.

குப்பைகளால் சுகாதார சீர்கேடு

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் தாலுகா, மணிகண்டம் ஒன்றியம், அல்லித்துறை ஊராட்சி 1-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் தங்களின் அறிவுத்திறனை வளர்த்துக்கொள்ளும் வகையில், நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நூலகத்திற்கு அப்பகுதியை சேர்ந்தவர்கள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் நூலகத்தின் அருகே சாலையோரம் மலைபோல் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், அல்லித்துறை.

Tags:    

மேலும் செய்திகள்